முதுகுளத்தூர்,கடலாடி வட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு!!!

இராமநாதபுரம் மாவட்டம்,முதுகுளத்தூர் மற்றும் கடலாடி வட்டத்தில் மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பான கணக்கீட்டு படிவம் வாக்குசாவடி நிலை அலுவலர்கள் வாக்காளர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று வழங்கி வருவதை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின்போது மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் முதுகுளத்தூர் வட்டம்,முதுகுளத்தூர்,காக்கூர் மற்றும் தேரிருவேலியில் வாக்காளர்களின் வீடுகளுக்கு சென்று கணக்கீட்டு படிவம் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வழங்கி வருவதை பார்வையிட்டதுடன்,மாவட்ட ஆட்சித்தலைவர் வாக்காளர்களிடம் கணக்கீட்டு படிவம் பதிவு செய்து வழங்குவதன் விவரம் குறித்து கேட்டறிந்ததுடன்,படிவம் பெற்ற வாக்காளர்கள் விரைவாக பூர்த்தி செய்து வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் திரும்ப வழங்க வேண்டும்.படிவம் பூர்த்தி செய்வதில் சந்தேகம் இருந்தால் அலுவலர்களிடம் தெரிந்து வாக்காளர்கள் சரியாக பூர்த்தி செய்திட வேண்டுமென தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து,கடலாடி மற்றும் சாயல்குடியில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வாக்காளர்களுக்கு கணக்கீடு படிவம் வழங்கி வருவதை பார்வையிட்டு ஆய்வு செய்ததுடன், வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் ஒவ்வொரு பகுதிக்கும் மீண்டும் சென்று பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை வாக்காளர்களிடமிருந்து மீள பெறுவதுடன் வாக்காளர்களுக்கு உரிய ஒப்புகை சீட்டு வழங்கிட வேண்டுமென அறிவுறுத்தினார்.

மேலும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மற்றும் கண்காணிப்பு அலுவலர்களிடம் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து கேட்டறிந்ததுடன், கண்காணிப்பு அலுவலர்கள் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு தேவையான வழிகாட்டுதலை மேற்கொண்டு கணக்கீட்டு படிவங்கள் அமைத்து வாக்காளர்களுக்கும் கிடைத்திடும் வகையிலும் மற்றும் வழங்கப்பட்ட படிவங்கள் விரைந்து மீள பெறுவதற்கும் உறுதுணையாக இருந்து செயலாற்றிட வேண்டுமென மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தெரிவித்தார்.
இந்த ஆய்வின்போது முதுகுளத்தூர் வட்டாட்சியர் கோகுல்நாத்,கடலாடி வட்டாட்சியர் பரமசிவம் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.



