சோழவந்தானில் நகர கூட்டுறவு வங்கி சார்பில் கூட்டுறவு வார விழாவை முன்னிட்டு மரக்கன்றுகள் நடப்பட்டது!!!

மதுரை மாவட்டம், சோழவந்தானில் நகர கூட்டுறவு வங்கி சார்பில் கூட்டுறவு வார விழாவை முன்னிட்டு மரக்கன்றுகள் நடப்பட்டது. சோழவந்தான் பேரூராட்சிக்கு உட்பட்ட மின் மயானத்தில் முதல்முறையாக மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு, பேரூராட்சி தலைவர் எஸ். எஸ் .கே. ஜெயராமன் தலைமை தாங்கி,
மரக்கன்றுகள் நட்டார் நகர கூட்டுறவு வங்கி பொது மேலாளர் வீரணன் அனைவரையும் வரவேற்றார்.
வங்கி மேலாண்மை இயக்குனர் கார்த்தி,
பேரூர் திமுக செயலாளர் வழக்கறிஞர் சத்திய பிரகாஷ் முன்னிலை வகித்தார்.
நிகழ்ச்சியில், பேரூராட்சி செயலாளர் செல்வகுமார் ,
மாவட்ட பிரதிநிதி பேட்டை பெரியசாமி, வார்டு கவுன்சிலர் குருசாமி,
ஒப்பந்ததாரர் பாலாஜி அருண் மற்றும் கூட்டுறவு வங்கி பணியாளர்கள் பேரூராட்சி பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர் .
விழாவில் ,
மின் மயானத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் 30க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டது.



