தொண்டியில் த.மு.மு.க-ம.ம.க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்:பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம்!!!

இராமநாதபுரம் மாவட்டம்,தொண்டியில் த.மு.மு.க-ம.ம.க நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் நகர் தலைவர் காதர் தலைமையில் த.மு.மு.க அலுவலகத்தில் நடைபெற்றது.துணைத்தலைவர் அலாவுதீன் வரவேற்புரை நிகழ்த்தினார்.மாவட்ட துணைச் செயலாளர் கவுன்சிலர் பெரியசாமி sir படிவம் தொண்டி அனைத்து பகுதியிலும் பூர்த்தி செய்து கொடுக்க த.மு.மு.க-ம.ம.க தோழர்கள் அனைவரும் முயற்சி எடுத்து மக்களை சென்றடையும் விதமாக பணிகளை செய்ய வேண்டும் என கூறினார்.

த.மு.மு.க மாநில செயலாளர் தொண்டி சாதிக்,த.மு.மு.க சேவைகள் பற்றியும் வருகின்ற டிசம்பர் 6 த.மு.மு.க சார்பில் பயங்கரவாத எதிர்ப்பு நாளில் மாவட்ட தலைநகரங்களில் நடக்கும் கருப்பு துண்டு அணிந்து நடக்கும் மக்களின் வாழ்வுரிமை,வழிபாட்டு உரிமைகள் உள்ளிட்ட உரிமைகளை பாதுகாத்திட நடைபெறும் கோரிக்கை போராட்டத்தில் தொண்டி சுற்றுவட்டார பகுதியில் இருந்து அதிகமான மக்களை அழைத்து செல்ல வேண்டும் என உரை நிகழ்த்தினார்.இந்த நிகழ்வில் த.மு.மு.க மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் பல்வேறு நிர்வாகிகள் மீனவர் அனி மாவட்ட துணைச் செயலாளர் பெரியசாமி,ம.ம.க பரக்கத் அலி,கல்யாணம், ராஜாராம்,ஜலால் நவ்ஃபிக் இப்ராஹிம்,முஸ்தபா செய்யது அஹமது,ரிஸ்வான்,மாரிமுத்து,முருகானந்தம் மணிமாறன்,மாரி ஆகிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தொண்டி செய்யது முஹம்மது அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்கள் நலன் கருதி சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும்,நிரந்தர ஆசிரியர்கள் பணி நியமனம் செய்ய வேண்டும்,
தொண்டியில் விளையாட்டு வீரர்கள் பல் வேறு விளையாட்டுகளில் சாதனை புரிந்து வருகின்றனர்.தொண்டி செய்யது முஹம்மது அரசு மேல்நிலைப்பள்ளியில் பெரிய இடம் இருந்தும் விளையாடுவதற்கு சிரமமாக உள்ளது.ஆதலால் பள்ளிக்கல்வித்துறை சார்பில் விளையாட்டு மைதானம் அமைத்து கொடுத்தால் மாணவர்கள் கல்வி மற்றும் விளையாட்டிலும் சிறந்து விளங்குவர்.பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி நிச்சயம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.முடிவில் த.மு.மு.க நகர செயலாளர் முஹம்மது மைதீன் நன்றி கூறினார்.



