சாயல்குடி அருகே பனாமா உணவகத்துக்கு அபராதம்: உணவுப் பாதுகாப்பு துறை அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை!!!

இராமநாதபுரம் மாவட்டம்,கடலாடி தாலுகா சாயல்குடி அருகே மலட்டாறு விளக்கில் பனாமா ஓட்டல் உணவகத்தை உணவுப் பாதுகாப்பு துறை அதிகாரிகள் அதிரடி ஆய்வு செய்தனர்.

இது குறித்து இராமநாதபுரம் மாவட்ட உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலர் சுரேஷ் தெரிவித்ததாவது:-
இராமநாதபுரம் மாவட்டம்,கடலாடி தாலுகா சாயல்குடி அருகே மலட்டாறு விலக்கில் செயல்பட்டு வரும் பனாமா உணவகம் சுகாதாரமற்ற முறையில் செயல்படுவதாக நேற்று தனியார் தொலைக்காட்சியில் செய்தி வெளியானது.அதனைத் தொடர்ந்து அந்த உணவகத்தில் உணவுப் பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டோம்.ஆய்வின் போது உணவகத்திற்கு உணவு பாதுகாப்பு உரிமம் பெறப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்ட பின்னர்,உணவருந்தும் மேஜைகளில் ஈக்கள் மொய்த்திருப்பது காணப்பட்டது.கை கழுவும் இடம் துருப்பிடித்த நிலையில் உள்ள குழாய்கள் மூலம் தண்ணீர் உபயோகத்தில் இருந்தது.மேலும் சுற்றுப்புறமும்,சமையலறையும் சற்று சுகாதாரம் குறைவாக தென்பட்டது.பணியாளர்களுக்கு உணவு பாதுகாப்புத் துறை சார்பாக வழங்கப்படும் ஃபாஸ்ட்ராக் பயிற்சி பெற்ற பணியாளர் யாரும் பணியில் இல்லை.எனவே அடுத்த முறை உணவு பாதுகாப்பு துறை சார்பாக வழங்கப்படும் பயிற்சியில் கலந்து கொண்டு சான்றிதழ் பெற அறிவுறுத்தப்பட்டது.மேலும் மேற்கூறிய குறைகளை சுட்டிக்காட்டி நோட்டீஸ் வழங்கப்பட்டது.அபராதத் தொகை விதிக்கப்பட்டது.

உணவு மாதிரி எடுக்கப்பட்டு,உணவு பாதுகாப்பு துறையினரின் தொடர் கண்காணிப்பில் அந்த உணவகம் இருந்து வருகிறது.



