இராமநாதபுரத்தில் வேளாண்மை உழவர் நலத் துறை மூலம் பயிர்காப்பீடு குறித்த விழிப்புணர்வு பிரச்சார வாகனம்:மாவட்ட ஆட்சியர் கொடியசைத்து துவக்கி வைத்தார்!!!

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வேளாண்மை உழவர் நலத் துறை மூலம் பயிர்காப்பீடு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு பிரச்சார வாகனங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் கொடியசைத்து துவக்கி வைத்து தெரிவிக்கையில்:-
இராமநாதபுரம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி சம்பாபருவம் (சிறப்பு) நெல் சாகுபடி செய்யப்பட்டுவருகிறது. நவம்பர் மாதத்தில் பருவமழை பொழிவு அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.எனவே விவசாயிகள் நவம்பர் 15-க்குள் பிரதமமந்திரி பயிர்காப்பீடு திட்டத்தின் கீழ் நெற்பயிர் காப்பீடு செய்து கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
பயிர்காப்பீடு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இராமநாதபுரம் மாவட்டத்திற்கு பிரதம மந்திரி பயிர்காப்பீடு திட்டத்தினை செயல்படுத்த தேர்வு செய்யப்பட்டுள்ள SBI General Insurance, Bajaj General Insurance நிறுவனங்களின் விழிப்புணர்வு பிரச்சார வாகனங்களை மாவட்ட ஆட்சியர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் அவர்கள் கொடி அசைத்து துவக்கி வைத்தார்.
வறட்சி,புயல்,அதிகமழை போன்ற எதிர்பாராத இயற்கை இடர்பாடுகள் ஏற்படும் பட்சத்தில் இழப்புகளை இடு செய்ய பிரதம மந்திரி பயிர்காப்பீடு திட்டத்தில் இணைந்து விவசாயிகள் பயன்பெறலாம்.இத்திட்டத்தின் கீழ் விவசாயிகள் நடப்புசம்பா (சிறப்பு) பருவநெல்லுக்கு பிரீமியமாக ஏக்கருக்கு 5.387.39-செலுத்தி பதிவு செய்துகொள்ளலாம்.
நடப்புசம்பா (சிறப்பு) நெல் பயிருக்குவிதைப்புகாலம் செப்டம்பர் தொடங்கி நவம்பர் 15 வரை விவசாயிகள் காப்பீடு செய்ய வருவாய் கிராமங்கள் அளவில் அறிவிக்கை செய்யப்பட்டுள்ளது.அறிவிக்கை செய்யப்பட்டுள்ள வருவாய் கிராமங்களை சார்ந்த கடன் பெறும் விவசாயிகள் தாங்கள் பயிர்க்கடன் பெறும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள்,தேசிய கூட்டுறவு வங்கிகள் அல்லது தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மூலமாகதங்கள் விருப்பத்தின் பேரில் ஏக்கருக்கு பிரீமியத் தொகை ரூ.387.39யை செலுத்தி பயிர்க்காப்பீடு செய்து கொள்ளலாம்.
அறிவிக்கை செய்யப்பட்டுள்ள வருவாய கிராமங்களை சார்ந்த கடன் பெறாத விவசாயிகள் அந்தந்த பகுதி, பொதுசேவை மையங்களில் பிரீமியத் தொகை ரூ.387.39யை செலுத்திபயிர் காப்பீடு செய்து கொள்ளலாம். நெற்பயிர் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் தங்கது பயிர்களுக்கான பிரீமியத் தொகை செலுத்தி காப்பீடு செய்து கொள்ள 15.11.2025 கடைசி தேதியாகும்.
இதர ராபி பருவபயிர்களுக்கு காப்பீடு செய்ய கடைசி நாள்,மாக்கச்சோளம்-30.11.2025, Go-16.12.2025,-30.11.2025,-15.11.2025,31.01.2026, சூரியகாந்தி-30.12.2025, நிலக்கடலை-30.12.2025 ஆகிய பயிர்களுக்கும் உரிய குறிப்பிட்ட காலத்திற்குள் அறிவிக்கை செய்யப்பட்ட கிராமங்களை சார்ந்த விவசாயிகள் பயிர் காப்பீடு செய்து கொள்ளலாம்.
விவசாயிகள் இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்யும் போது முன் மொழிவு விண்ணப்பதுடன் பதிவு விண்ணப்பம், ஆதார அட்டை நகல்,கிராம நிர்வாக அலுவலர்வழங்கும் அடங்கல்,ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட மற்றும் KYC பூர்த்தி செய்யப்பட்ட வங்கிகணக்கு புத்தகத்தின் முதல் பக்கநகலை இணைத்து காப்பீடு செய்துகொள்ள வேண்டும்.
எனவே பயிர்க்காப்பீடு செய்யும் போது சாகுபடி செய்துள்ளவிவசாயி, தங்களது பெயர்,வருவாய் கிராமத்தின் பெயர்,புல எண்,பரப்பளவு,வங்கி கணக்கு எண் முதலான விபரங்கள் ரசீதுசீட்டில் சரிபார்த்து பெற்றுக் கொள்ள வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் சிம்ரன்ஜீத் சிங் காபோன் தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்ச்சியில் வேளாண்மைத்துறை துணை இயக்குநர் பாஸ்கர மணியன்,உதவி இயக்குநர் (தரக்கட்டுப்பாடு) நாகராஜன், உதவி இயக்குநர் (பயிர்காப்பீடு) கீதாஞ்சலி,மற்றும் எஸ்.பி.ஐ,பஜாஜ் இன்சூரன்ஸ் நிறுவன அலுவலர்கள் கலந்து கொண்டனர்.



