இராமநாதபுரத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பான கலந்தாய்வு கூட்டம்!!!

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி,வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SPECIAL INTENSIVE REVISION) குறித்து, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் கலந்தாய்வுக் கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமையில் நடைபெற்றது.இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, இந்திய அரசியலமைப்பின் 324-வது பிரிவு மற்றும் 1950-ஆம் ஆண்டு மக்கள் பிரதிநித்துவச் சட்டப் பிரிவு 21 மற்றும் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1950-இன் பிற பொருத்தக்கூடிய பிரிவுகளின் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை பயன்படுத்தி 01.01.2026-ஐ தகுதியேற்படுத்தும் நாளாகக் கொண்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத்திருத்தம் மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தொகுதிகள் வாரியான வாக்குச்சாவடிகள் மற்றும் வாக்காளர்களின் விவரங்கள் பின்வருமாறு:-209 -பரமக்குடி(தனி) சட்டமன்ற தொகுதி வாக்காளர்கள் மொத்தம் 257350 (இதில் ஆண் 126937, பெண் 130930 மற்றும் மூன்றாம் பாலினத்தவர் 23), 210 திருவாடனை சட்டமன்ற தொகுதி வாக்காளர்கள் மொத்தம் 302651 (இதில் ஆண் 150520, பெண் 152106 மற்றும் மூன்றாம் பாலினத்தவர் 25), 211 -இராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி வாக்காளர்கள் மொத்தம் 327721 (இதில் ஆண் 161950, பெண் 165756 மற்றும் மூன்றாம் பாலினத்தவர் 15), 212 முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதி வாக்காளர்கள் மொத்தம் 320968 (இதில் ஆண் 159776, பெண் 161189 மற்றும் மூன்றாம் பாலினத்தவர் 3) வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத்திருத்தம் தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள வழிமுறைகள் குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியரால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்களுக்கு தெளிவான விளக்கம் வழங்கப்பட்டது.வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தம் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள கீழ்கண்ட அட்டவணையின்படி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது.முன்னேற்பாடுகள் / பயிற்சி / அச்சடித்தல் பணி 28.10.2025 (செவ்வாய்) முதல் 03.11.2025 (திங்கட்கிழமை) வரை, கணக்கீட்டிற்கான காலம் 04.11.2025 (សំយំ) ប្រល់ 04.12.2025 (வியாழக்கிழமை) வரை, வாக்குச்சாவடி நிலையங்களை மறுசீரமைத்தல் / திருத்தியமைத்தல் 04.12.2025 (வியாழக்கிழமை) -க்குள், கட்டுப்பாட்டு அட்டவணையை (Control table) மேம்படுத்துதல் மற்றும் வரைவுப் பட்டியலைத் தயாரித்தல் 05.12.2025 (வெள்ளி) முதல் 08.12.2025 (திங்கட்கிழமை) வரை, வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடும் நாள் 09.12.2025(செவ்வாய்), ஏற்புரைகள் மற்றும் மறுப்புரைகள் விண்ணப்பிக்கும் காலம் 09.12.2025 (செவ்வாய்) முதல் 08.01.2026 (வியாழக்கிழமை) வரை, அறிவிப்பு கட்டம் (வழங்கல், விசாரணை மற்றும் சரிபார்ப்பு) கணக்கீட்டு படிவங்கள் மீதான முடிவுகள் மேற்கொள்ளுதல் மற்றும் ஏற்புரைகள் மற்றும் மறுப்புரைகள் மீதான தீர்வு காணுதல் ஆகியவை ஒரே நேரத்தில் மேற்கொள்ளப்பட்டு, இவை அனைத்தும் வாக்காளர் பதிவு அலுவலரால் முடிக்கப்பட வேண்டிய தேதி – 09.12.2025 (செவ்வாய்) முதல் 31.01.2026 (சனிக்கிழமை ) வரை, இறுதி வாக்காளர் பட்டியலின் தர அளவுகளை சரிபார்த்தல் மற்றும் இறுதி வெளியீட்டிற்கு ஆணையத்தின் ஒப்புதலைப் பெறுதல் 03.02.2026 (செவ்வாய்)-க்குள் மற்றும் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடும் நாள் – 07.02.2026 (சனிக்கிழமை) இறுதி வாக்காளர் பட்டியல் 07.02.2026 அன்று வெளியிடப்பட்டு அதன் விவரம் மாநில தலைமை தேர்தல் இணையதளமான http://www.elections.tn.gov.in மற்றும் இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் இணையதளமான https://ramanathapuram.nic.in பதிவேற்றம் செய்யப்படும் எனவும் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியரால் தெரிவிக்கப்பட்டது.வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தப் பணி மேற்கொள்ளும் பொது, வாக்காளர் பதிவு அலுவலர்கள் எந்த ஒரு தகுதியான வாக்காளரையும், வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதிலிருந்து விடக்கூடாது. தகுதியற்ற நபர்களை வாக்காளர்களாக சேர்க்க கூடாது எனவும் அறிவுறுத்தபட்டது. வாக்குசாவடி நிலை அலுவலர்கள் (BLO) வருகின்ற 04.11.2025 முதல் 04.12.2025 வரை வீடு வீடாக ஒவ்வொரு வீட்டிற்கும் 3 முறை சென்று கணக்கெடுப்பார்கள் என தெரிவிக்கப்பட்டது.வாக்காளர்கள் பூர்த்தி செய்யப்பட்ட கணக்கெடுப்பு படிவத்தை திரம்ப BLO/BLA- விடம் வழங்கினால் போதுமானது 61601 அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுக்கு தெரிவிக்கப்பட்டது.மேற்படி, ஆலோசனைக் கூட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் தொடர்பாக விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. அனைவரும் இப்பணிகள் சிறப்பாக நடைபெற ஒத்துழைப்பு வழங்க கேட்டுக் கொள்ளப்பட்டது.எனவே பொதுமக்கள் மற்றும் அனைத்து கட்சியினரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத்திருத்தப் பணிக்கு முழுமையாக ஒத்துழைப்பு வழங்கிடுமாறு மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தெரிவித்துள்ளார்.



