சிவகங்கையில் மாவட்ட அளவிலான வங்கியாளர்கள் குழுக் கூட்டம்!!!

சிவகங்கை மாவட்டம்,சிவகங்கை மாவட்டத்தில் வங்கிகளில் உள்ள உரிமை கோரப்படாத வைப்பு தொகை (Unclaimed Deposit) தீர்வு குறித்த விழிப்புணர்வு முகாமானது,மூன்றாவது காலாண்டு மாவட்ட அளவிலான வங்கியாளர் குழு கூட்டத்தின் போது மாவட்ட ஆட்சித்தலைவர் கா.பொற்கொடியால் தொடங்கி வைக்கப்பட்டது.
சிவகங்கை மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட முன்னோடி வங்கி ஆகியவைகளின் சார்பில்,மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில்,நடைபெற்ற மாவட்ட அளவிலான வங்கியாளர் குழு கூட்டத்தில்,மாவட்ட ஆட்சித்தலைவர் கா.பொற்கொடி,சிவகங்கை மாவட்ட வங்கிகளில் உள்ள உரிமை கோரப்படாத வைப்பு தொகை (Unclaimed Deposit) தீர்வு குறித்த விழிப்புணர்வு முகாமினை தொடங்கி வைத்து தெரிவிக்கையில்:-
சிவகங்கை மாவட்ட வங்கிகளில்,உள்ள உரிமை கோரப்படாத வைப்பு தொகை (Unclaimed Deposit) தீர்வு குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்திடும் வகையில்,உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளும் பொருட்டு, “உங்கள் பணம் – உங்கள் உரிமை” (Your Money, Your Rights) என்ற தலைப்பில் பொதுமக்களிடையே சிறப்பு விழிப்புணர்வு முகாம்கள் நடத்திடுவதற்கு ஏதுவாக,விழிப்புணர்வு முகாமானது,மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட முன்னோடி வங்கி ஆகியவைகளின் சார்பில் நடைபெற்ற மாவட்ட அளவிலான மூன்றாவது காலாண்டு வங்கியாளர் குழு கூட்டத்தில் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.இதனைத்
தொடர்ந்து “உங்கள் பணம் – உங்கள் உரிமை” (Your Money, Your Rights) என்ற தலைப்பில் பொதுமக்களுக்கு சிறப்பு விழிப்புணர்வு முகாம்கள் மாவட்டம் முழுவதும் உள்ள வங்கி கிளைகள் வாயிலாக நடத்திட திட்டமிடப்பட்டு,வருகின்ற டிசம்பர் 31-ம் தேதி வரை அந்தந்த வங்கி கிளைகளில் நடத்திட உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வங்கியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.சிவகங்கை மாவட்டத்தில் மொத்தம் சுமார் ரூ.40 கோடி மதிப்பீட்டிலான உரிமை கோரப்படாத வைப்பு தொகைகள் வங்கிகளில் உள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனை பொதுமக்கள் தங்களது உரிய ஆவணங்களுடன் சமர்ப்பித்து, “உங்கள் பணம் – உங்கள் உரிமை” (Your Money, Your Rights) என்ற அடிப்படையில் உரிமை கோரி பெறலாம்.மேலும்,வாடிக்கையாளர்களின் கணக்கு விவரங்கள் சரிபார்க்கும் முறை,பழைய சேமிப்பு கணக்குகள் மீட்டெடுக்கும் வழிமுறைகள் உள்ளிட்டவைகள் குறித்து,வங்கி அதிகாரிகளின் சார்பில் இக்கூட்டத்தில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.மேலும்,உரிமை கோரப்படாத தொகைகளை தீர்க்க வங்கிகள் சிறப்பு கவனம் செலுத்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது.மேலும், பொதுமக்கள் www.udgam.rbi.org.in/unclaimed-deposits/#/login என்ற இணையதளத்தின் வாயிலாக விபரங்களை அறிந்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் கா.பொற்கொடி, தெரிவித்தார்.இக்கூட்டம் மற்றும் முகாமின் தொடக்க விழாவின் போது,மாவட்ட நிர்வாகத்தால் திட்ட வைப்புத்தொகை உரிமை கோரப்பட்ட திட்ட தொகையினை,ஐஓபி திருப்பாச்சேத்தி வங்கிமேலாளர் மூலம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மண்டல அதிகாரி மற்றும் மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ஆகியோர் இணைந்து,ரிசர்வ் வங்கியால் அனுமதிக்கப்பட்ட ரூபாய் 6.48 லட்சத்திற்கான உரிமை கோரப்படாத திட்டத் தொகையினை மாவட்ட ஆட்சித்தலைவரிடம் ஒப்படைத்தனர்.
மேலும்,இந்நிகழ்வின் போது உங்கள் பணம் – உங்கள் உரிமை” (Your Money, Your Rights) தொடர்பான விழிப்புணர்வு கையேடு,மாவட்ட ஆட்சித்தலைவரால் வெளியிடப்பட்டது.இந்நிகழ்வில்,இந்தியன் ஓவர்சீஸ் வங்கி துணை மண்டல மேலாளர் லட்சுமிராஜ்,ரிசர்வ் வங்கி உதவி பொது மேலாளர் அன்பரசு,மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் பிரவீன் குமார்,நபார்டு
வங்கி உதவி பொது மேலாளர் அனிஷ் குமார்,கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் இராஜேந்திர பிரசாத்,மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நல அலுவலர் ஐ.சையது முகைதீன் இப்ராகிம் உள்ளிட்ட அனைத்து வங்கி அதிகாரிகள் மற்றும் அரசு துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.



