வாக்குச்சாவடி நிலைய அலுவலர்களுக்கான பயிற்சி கூட்டம்!!!

இராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர்,பரமக்குடி மற்றும் திருவாடானை சட்டமன்ற தொகுதிகளுக்கு வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து வாக்குச்சாவடி நிலையை அலுவலர்களுக்கான (BLO) பயிற்சி கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் முதுகுளத்தூர்,பரமக்குடி தொகுதிக்குட்பட்ட பயிற்சிக் கூட்டங்களுக்கு சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது அவர் தெரிவித்ததாவது:-
இந்திய தேர்தல் ஆணையம் வழிகாட்டுதலின்படி,வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பான பணிகள் நடைபெற உள்ளது. இப்பணியில் ஈடுபட்டுள்ள வாக்குச்சாவடி நிலைய அலுவலர்கள் (BLO) தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட பணிகளை சிறப்புடன் கையாண்டு வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பான பணிகளை நல்ல முறையில் முடித்திட வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பணி மேற்கொள்ளவுள்ள வாக்குச்சாவடி நிலைய அலுவலர்கள் கணக்கெடுப்பு படிவத்தை வாக்காளர்களின் வீடுகளுக்கு சென்று வழங்கி,ஒப்புதல் பெற வேண்டும். அதே போல் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சேகரிக்கும் பொழுதும் ஒப்புதல் தர வேண்டும்.குறிப்பாக களப்பணியில் ஈடுபட்டுள்ள வாக்குச்சாவடி நிலைய அலுவலர்கள் கணக்கெடுப்பு வடிவத்தை வீடுகளுக்கே நேரடியாக சென்று வழங்கி,விடுபடாத வகையில் பணிகளை கவனமுடன் செயலாற்ற வேண்டும்.கணக்கெடுப்பு படிவம் பூர்த்தி செய்து திரும்பப் பெறுவது தொடர்பான விவரங்களை பயிற்சி வகுப்பில் முழுமையாக தெரிந்து கொண்டு பணியில் சிறப்பாக செயலாற்ற வேண்டும்.
இக்கூட்டத்தில் பரமக்குடி வருவாய் கோட்டாட்சியர் ஞா.சரவண பெருமாள்,மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் ராஜா,வட்டாட்சியர்கள் கோகுல்,வரதன்,பரமசிவம் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.



