மகிண்டி ஊராட்சியில் உள்ளாட்சி தின கிராம சபைக் கூட்டம்:மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் பங்கேற்பு!!!

இராமநாதபுரம் மாவட்டம்,முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றியம்,மகிண்டி ஊராட்சியில் உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் பங்கேற்று,ஊராட்சியில் மேற்கொள்ளப்பட்ட திட்டங்கள் மற்றும் மேற்கொள்ள வேண்டிய திட்டங்கள் குறித்து பொதுமக்களிடம் கேட்டறிந்தார்.
அப்போது அவர் தெரிவித்ததாவது:-

கிராம சபைக் கூட்டத்தின் நோக்கம் ஊராட்சியின் வளர்ச்சிக்கு தேவையான திட்டங்களை பொதுமக்கள் ஒன்று கூடி கலந்து ஆலோசித்து தீர்மானங்களை நிறைவேற்றுவதாகும்.அந்த வகையில் இன்று நடைபெறும் கிராம சபைக்கூட்டம் போல் ஒவ்வொரு கிராம சபை கூட்டத்திலும் ஊர் பொதுமக்கள் முழுளவில் கலந்து கொண்டு மேற்கொள்ளப்பட்ட பணிகள் மற்றும் தேவையான பணிகளை தேர்வு செய்து தீர்மானத்தின் மூலம் நிறைவேற்றி திட்டங்களை செயல்படுத்திட வேண்டும்.கிராம சபையில் முன்மொழியும் ஒவ்வொரு திட்டமும் வலுசேர்க்கக்கூடிய ஒன்றாகும். அது மட்டுமின்றி தனிநபர் பொருளாதார முன்னேற்றத்திற்கும் கிராம சபைக்கூட்டம் பயனுள்ளதாக அமையும்.எனவே அனைவரும் இதுபோன்ற கிராம சபை கூட்டங்களில் பங்கேற்று பயன்பெற வேண்டும்.மேலும் இப்பகுதியில் சாலைகள் சீரமைத்தல்,குடிநீர் திட்ட பணிகளை மேம்படுத்துதல் போன்ற திட்டங்களுக்கு சிறப்பு கவனம் எடுத்து பணிகளை செயல்படுத்தப்பட்டு வருகிறது.மேலும் வீட்டுமனை பட்டா இல்லாதவர்களுக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.அதே போல் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் விண்ணப்பித்தவர்களுக்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.மேலும் புதிதாக பெறப்படும் மனுக்களுக்கு வரும் நிதியாண்டில் வீடுகள் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.இது போன்ற கிராம சபைக் கூட்டங்களில் துறை அலுவலர்கள் வருகை தரும் பொழுது பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகளை அலுவலர்களிடம் தெரிவித்து பயன்பெற்றிட வேண்டும்.
இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தெரிவித்தார்.
தொடர்ந்து வேளாண்மைத்துறையின் மூலம் 10 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் வழங்கினார்.

இக்கூட்டத்தில் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) திவ்யான்ஷீநிகம்,உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) பத்பநாபன்,முதுகுளத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாலதண்டாயுதம்,ஜானகி மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.



