கீழக்கரை வி.சி.க நகர் செயலாளர் பாசித் இல்யாஸ் சேர்மன்,சட்டமன்ற உறுப்பினர் நாடாளுமன்ற உறுப்பினர் அவர்களுக்கு வலியுறுத்தல்!!!

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் அண்ணாநகர் பகுதியில் வருகால் திறந்த நிலையில் நான்கு வருடங்களுக்கும் மேலாக உள்ளது 70 க்கும் மேற்பட்ட மூடிகள் போடாமல் பொதுமக்கள் அடிக்கடி கீழே விழக்கூடிய சூழல் உருவாகிறது வாறு கால் திறந்த நிலையில் காணப்படுவதால் துர்நாற்றம் ஏற்பட்டு கழிவு நீர் தேங்கி நோய் நொடிகள் பொதுமக்களுக்கு ஏற்படும் சூழல் உள்ளது.

ஓட்டு கேட்டு வரும் போது மட்டும் வந்தார்கள் அதற்குப் பிறகு யாரும் வரவில்லை ஓட்டுக்கு மட்டுமே நாங்கள் பயன்படுறோம் மீண்டும் ஓட்டு போட மாட்டோம் என்கின்ற கேள்வியை பொதுமக்கள் வைக்கிறார்கள்.அதனால் விரைந்து அந்தப் பகுதி முழுவதும் தூர்வாரி எல்லா இடங்களிலும் கால்வாய் மூடிகள் போட வேண்டுமென்று விடுதலை சிறுத்தைகள் சார்பாக கோரிக்கையாக வைக்கிறோம்.

மேலும் பதினைந்தாவது வார்டு பன்னாட்டார் தெருவில் அமைந்திருக்கும் 31 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் பொதுக் கழிப்பறை ஒன்றரை வருடமாக கட்டிக் கொண்டிருக்கிறார்கள் 4 மாதமாக வேலைக்கு யாரும் வரவில்லை என்கின்ற தகவலை பொதுமக்கள் விடுதலை சிறுத்தைகளிடம் கூறுகிறார்கள்.

பத்து வீடுகளுக்கு மேலாக கழிப்பறை வசதி இல்லாத சூழ்நிலையில் பொதுமக்கள் மிகவும் அவதிக்கு உள்ளாக இருக்கிறார்கள் இரண்டு கோரிக்கையும் சட்டமன்ற உறுப்பினர் நாடாளுமன்ற உறுப்பினர் நேரடியாக பார்வையிட்டு அதை சரி செய்ய வேண்டுமென்று கீழக்கரை பொதுமக்கள் சார்பாகவும் விடுதலை சிறுத்தைகள் சார்பாகவும் கோரிக்கையாக வைக்கிறோம்.



