தமிழகம்மாவட்டச் செய்திகள்
பழமையான சிவன் ஆலயத்தில் அன்னாபிஷேகம்!!!

உசிலம்பட்டி அருகே பழமையான கோட்டைகல் சிவன் கோவிலில் அன்னாபிஷேக தினத்தை முன்னிட்டு திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே தொட்டப்நாயக்கனூரில் பழமையான கோட்டைகல் சிவன் கோவில் ஐப்பசி மாதம் அன்னாபிஷேகம் ஒவ்வொரவி ஆண்டும் விமர்சியாக நடைபெறுகிறது.


இந்நிலையில்,
இந்த ஆண்டு அன்னாபிஷேகத்தை முன்னிட்டு 15 கிலோ அரிசியால் அன்னம் தயாரிக்கப்பட்டு அன்னத்தினால் லிங்கத்திற்கு அன்னாபிஷேக வைபவம்
நடைபெற்றது.
இதில், பூக்கள்,காய்கறிகள், பழங்கள் கொண்டு அலங்கரிக்கப்பட்டது.
தொடர்ந்து, அன்னாபிஷேகத்தில் பூஜைகள் செய்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இதில்,
இப்பகுதியை சுற்றியுள்ள திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து, கோவிலில் அன்னதானம் நடைபெற்றது.




