மதுரையில் தீவிர முறை திருத்தம்:ஆட்சியர் கே.ஜே.பிரவீன்குமார் ஆய்வு!!!

மதுரை மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித் தலைவர் கே.ஜே.பிரவீன் குமார், தலைமையில்
மதுரை மாவட்டம் 194-மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரமுறைத் திருத்தம் 2026 (SIR) தொடர்பாக வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடுகளுக்கு சென்று வாக்காளர் கணக்கீட்டு படிவங்களை வழங்கும் பணியினை ஆய்வு செய்து பார்வையிட்டார்.

மதுரை மாவட்ட
ஆட்சித் தலைவர்
கே.ஜே. பிரவீன் குமார்,
மதுரை மாவட்டம், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் என்ற திட்டத்தின் கீழ்
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஒரு நாள் கருத்தரங்கில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றி விழிப்புணர்வு பதாதைகளை வெளியிட்டு பங்கேற்றவர்களுக்கு பங்கேற்புச் சான்றிதழ் வழங்கினார்.




