மதுரை அவனியாபுரம் பத்ரகாளி அம்மன் திருக்கோவில் மகா கும்பாபிஷேகம்!!!

மதுரை,அவனியாபுரம் கல்யாண சுந்தரேஸ்வரர் கோவில் அருகில் உள்ள அருள்மிகு பத்ரகாளி அம்மன் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. ஆயிரகணக்கான பக்தர்கள் ஓம்சக்தி கோஷத்துடன் சாமி தரிசனம் செய்தனர்.
மதுரை மாவட்டம்,அவனியாபுரம் அருள்மிகு பத்திரகாளி அம்மன் திருக்கோவிலில்
கடந்த 3-ம் தேதி மாலை 6:00 மணிக்கு அனுக்கிரஹ பூஜை விக்னேஸ்வர பூஜை மற்றும் வாஸ்து சாந்தியுடன் முதல் கால யாக பூஜை நடைபெற்றது.

பின்னர் 4-ம் தேதி காலை 10:30 மணி முதல் இரண்டாம் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றது.மாலை 6 மணிக்கு 3ம் கால யாக சாலை பூஜை நடைபெற்றது.
5ஆம் தேதி காலை 7:45 மணியளவில் நான்காம் கால யாக சாலை பூஜை பூர்ண கூதியுடன் நிறைவு பெற்றது.பின்னர் கும்பங்களில் உள்ள புனித நீர் எடுத்து செல்லப்பட்டு சிலைகளில் புனித நீர் ஊற்றப்பட்டது.பின்னர்,கோவில் நிர்வாகம் சார்பாக 2000 பேருக்கு அன்னதானம் ஏற்பாடு செய்யப்பட்டது.



