கடலூர் தொகுதி யார்? பக்கம்:திமுகவா? அதிமுகவா?

கடலூர் மாவட்டம் தற்போது தலைமை மாவட்டம்.இங்க யாருக்கு பலம் அதிமுக திமுக என மாறி மாறி இருந்து வருகிறார்கள்.தற்போது திமுக பல திட்டங்கள் செய்தும் இன்னும் சரியாக செய்யவில்லை என்றாலும் திரும்பவும் திமுக வட்டாரங்கள், நிர்வாகிகள்,தொண்டர்கள் என திமுக வசம் என பலர் பலவிதமாக சொல்லபடுகிறது. அதே சமயம் அதிமுக எப்படியாவது வரும் தேர்தலில் நாம் வந்து விட வேண்டும் என்று அவர்கள் இப்போதே மக்களுக்கு வேண்டியதை வீடு தேடி செய்வதாக பொது மக்களால் பேசப்படுகிறது.எது எப்படியோ யார் வந்தாலும் மக்களுக்கு நல்லது செய்தால் எப்போதும் தொகுதிக்கு செய்ய வேண்டியதை செய்ய வேண்டும்.வரும் தேர்தலில் மக்களுக்கு தினமும் குறைகளை கேட்டு உடனுக்குடன் நிவர்த்தி செய்தால் தொகுதியை தக்க வைக்கலாம் யார் என்று பொறுத்து இருந்து பார்ப்போம்.கடலூர் மாவட்டம் சுற்றி உள்ள பகுதியில் விவசாயம் மற்றும் சுய தொழில் நிறைய கம்பெனி வேலை பார்க்கும் மக்கள் இருக்கின்றனர்.மக்களுக்கு தேவையான அடிப்படை தேவைகள் பட்டா மாறுதல்,ரேஷன்,மருத்துவம்,கல்வி,வேலைவாய்ப்பு, என அனைத்தும் இப்போ சீராக நடக்கிறது இருந்தும் அதில் சில குளறுபடி வருகிறது.

கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து பல பேர் இது வரை வேலை இல்லாமல் இருக்கிறார்கள்.அவர்களில் ஒரு சில பேர் கூலி வேலை செய்கிறார்கள்.சுமார் 1993-ல் பதிவு செய்தவர்கள் சுமார் 50 வயதையும் கடந்து விட்டது.அவர்களுக்கு அரசு சார்பில் ஏதாவது உதவி தொகை கொடுத்தால் நல்லது என அவர்கள் கூறும் போது வேதனையாக இருக்கிறது.இதை எல்லாம் சரிசெய்ய வேண்டும் இதை எல்லாம் கடலூருக்கு வரும் புதியவர்கள் நன்றாக செய்ய வேண்டும்.மக்கள் விருப்பம் இப்படி இருக்க வரும் தேர்தலில் இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுத்தால் நல்லது என ஒரு சில கட்சி நிர்வாகிகள் சொல்ல கேட்க முடிகிறது.அது நடந்தால் இன்னும் தொகுதியில் விறுவிறுப்பாக இருக்கும் கட்சி உள்ளேயும்,வெளியேயும் இன்னும் சீட்டு கேட்டு தராமல் கட்சி வேலைகளை இன்னும் செய்து கொண்டிருக்கும் கட்சி நிர்வாகிகளை தேர்ந்தெடுத்து அவர்கள் ஒருவரை நியமித்தால் இன்னும் சிறப்பு என கட்சி நிர்வாகிகள் புலம்பல்.அது கட்சி மேல்பார்வையாளர் கையில் இருக்கட்டும் கவனிப்பார்கள் என நம்புவோம் நடக்குமா? பொறுத்திருந்து பார்ப்போம்.



