தமிழகம்மாவட்டச் செய்திகள்

இராமநாதபுரம் மாவட்டத்தில் ஹஜ் பயணிகளுக்கு சேவையாற்ற மாநில ஹஜ் ஆய்வாளர்கள் பணிக்கு விண்ணப்பிக்கலாம்:மாவட்ட ஆட்சியர் அழைப்பு!!! 

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்ததாவது:-

மும்பைபில் உள்ள இந்திய ஹஜ் குழுவானது தனது சுற்ற்றிக்கை எண்.13 நாள்:13.10.2025 -இல் 2026 இல் புனித பயணம் மேற்கொள்ளவிருக்கும் தமிழ் நாட்டைச் சேர்ந்த ஹஜ் பயணிகளுக்காக சேவையாற்ற மாநில ஹஜ் ஆய்வாளர்களை தற்காலிகமாக சவூதி அரேபியா அனுப்ப, நிகர்நிலை மூலம் (Online) விண்ணப்பங்களை வரவேற்கிறது. தற்காலிக பணிக்காலம் 13.04.2026 முதல் 05.07.2026 வரை சுமார் இரண்டு மாத காலமாகும்.மத்திய/மாநில அரசு ஊழியர்கள்,துணை இராணுவப் படைகளில் பணியாற்றும் தகுதி வாய்ந்த அலுவலர்கள் மற்றும் தன்னாட்சி அமைப்புகள் அல்லது மத்திய மாநில அரசின் கீழ் இயங்கும் பொது நிறுவனங்களில் பணியாற்றும் நிரந்தர பணியாளர்கள்,விண்ணப்பிக்க தகுதி வாய்ந்தவர்கள் ஆவர்.மாநில ஹஜ் ஆய்வாளர்கள் சவூதி அரேபியாவில் பணிபுரியும் காலம் பணிக் காலமாக கருதப்படும்.இப்பணிக்காக நிகர்நிலை மூலம் (Online) விண்ணப்பிக்கும் முறை,தகுதி,நியமனமுறை ஆகியன மும்பை இந்திய ஹஜ் குழுவின் இணைய முகவரியில் (www.hajcommittee.gov.in) அறிந்து கொள்ளலாம்.இவ்வாறு அந்த  செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button