தமிழகம்மாவட்டச் செய்திகள்

மதுரை விமான நிலைய புதிய வான் கட்டுப்பாட்டு கோபுரம்(ATC Tower) ரூ.88 கோடியில் நவீன வசதிகளுடன் வரும் ஜனவரி மாத இறுதியில் செயல்பாட்டுக்கு வரும் -மதுரை விமான நிலைய இயக்குனர் தகவல்!!!

மதுரை விமான நிலையத்தில் இருந்து சென்னை, பெங்களுரூ, ஐதராபாத், டெல்லி, மும்பை உள்நாட்டு சேவைகளும், துபாய், இலங்கை, அபுதாபி என வெளிநாடுகளுக்கும் விமான சேவைகளும் இயக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையே, சமீபத்தில் பயணிகளின் வருகையை அடிப்படையாக கொண்டு, மதுரை விமான நிலையம், 3-ம் தரநிலையில் இருந்து 2-ம் தரநிலைக்கு உயர்த்தப்பட்டது. இதனால், மதுரை விமான நிலையத்தை பயன்படுத்தும் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.
இந்தநிலையில், கூடுதல் விமான இயக்கும் வகையில் மதுரை விமான நிலையத்தை விரிவாக்கம் செய்யும் பணிகளும் மும்முரமாக நடந்து வருகிறது.

இதுதவிர விமான ஓடு தளம் விரிவாக்கம் உள்ளிட்ட பல்வேறு கட்ட மேம்பாட்டுப் பணிகள், மதுரை விமான நிலையத்தில் நடந்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக புதிய வான்வழிக் கட்டுப்பாட்டு கோபுரம் (ஏ.டி.சி. டவர்) அமைக்கும் பணிகள் கடந்த 2021-ல் தொடங்கப்பட்டது.அதிநவீன வசதிகளுடன் அமையும் இந்த வான் வழிக்கட்டுப்பாட்டு மையத்திற்கு, ரூ.88 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு தற்போது அந்த பணிகள் முடிவடைந்து சோதனை ஓட்டம் நிறைவு பெற்றுள்ளது.

இதன் மூலம் விமான நிலையத்தில் விமானங்கள் சரியான நேரத்தில் தரையிறங்குவது, புறப்படுவதை எளிதாகவும், துல்லியமாக கையாளும் வகையில் அமைக்கப்படுகிறது. சுமார் 44.9 மீட்டர் உயரத்தில் கட்டப்படும் இக்கட்டிடம் 7 மாடிகளை கொண்டது. இதில்,
4 மாடிகள் கட்டிடமாகவும், 3 மாடிகள் கோபுரமாகவும் வடிவமைக்
கப்பட்டுள்ளன.
தற்போது பெரும்பாலான பணிகள் முடி உற்றுள்ளது.
இதுகுறித்து,

மதுரை விமான நிலைய இயக்குனர் கூறுகையில்:-

புதிதாக கட்டப்பட்டு வரும் வான்கட்டுப்பாட்டு மையத்தின் கட்டிட வேலைகள் 100% முடிவடைந்த நிலையில் தொழில்நுட்ப சோதனை ஓட்டம் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது. மேலும் ,
விமான நிலையத்திற்கு வந்து செல்லும், விமானங்களை கையாளும் கட்டுப்பாட்டு மையம் என்பது விமான நிலையம், பாதுகாப்பு, பராமரிப்பு, தகவல் தொடர்பு மற்றும் பிற விமான நிலைய செயல்பாடுகளுக்கு இடையிலான ஒருங்கிணைப்பு பணிகள் முடிவடைந்துள்ளது. மேலும் தற்போது இது குறித்து பாதுகாப்பு ஆய்விற்காக விமான போக்குவரத்து அமைச்சரகத்தில் இருந்து அனுமதி வந்தவுடன் அதிகாரப்பூர்வமாக செயல்பட தொடங்கும்.
இதன் மூலம் முன்பைவிட விமானங்கள் வருகை, புறப்பாடுகளை துல்லியமாக கையாள முடியும். விமானங்களின் இயக்கத்தை 3 திசைகளிலும்
(3 டைமண்ட்ஸ் வியூ) நன்றாக கண்காணிக்கலாம். இதன் மூலம் பயணிகளின் பாதுகாப்பான பயணம் உறுதி செய்யப்படும். அதிக விமானங்களை விரைவாக கையாளுவதிலும் சிரமம் இருக்காது. வரும் ஜனவரி இறுதிக்குள் செயல்பாட்டுக்கு
வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ,
மதுரை விமான நிலையம் தற்போது 24 மணி நேரமும் செயல்பட்டு வருகிறது இரவு நேரங்களில் விமானங்கள் மற்றும் பயணிகள் வருவதில்லையே தவிர வான் கட்டுப்பாட்டு வரை மற்றும் விமான நிலையத்திற்குள் நடைபெறும் அனைத்து வேலைகளும் 24 மணி நேரமும் தற்போது நடைபெற்று வருகிறது என,
மதுரை விமான
நிலைய இயக்குனர் கூறினார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button