தமிழகம்மாவட்டச் செய்திகள்

மதுரையில் ஆடவர்களுக்கான ஹாக்கி போட்டி!!!

மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் கே.ஜே.பிரவீன் குமார்,மதுரை மாவட்ட விளையாட்டு அரங்க வளாகத்தில் வரும் 28-11-2025 முதல் 10-12-2025 வரை 14வது ஹாக்கி ஆடவர் ஜூனியர் உலகப்கோப்பை நடைபெற
உள்ளதை முன்னிட்டு, மைதானத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகள் மற்றும் பாதுகாப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்து பார்வையிட்டார்.


மாநகர காவல் ஆணையர் லோகநாதன்,
உடன் உள்ளார்.
வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி ,
மாவட்ட ஆட்சித் தலைவர்
கே.ஜே. பிரவீன் குமார், தலைமையில்
மதுரை மாவட்டம், தமுக்கம் மைதானத்தில் 22.11.2025 முதல் 03.12.2025 வரை 12 நாட்கள் நடைபெற உள்ள அகில இந்திய அளவிலான “சரஸ் மேளா” நடைபெற உள்ளதை முன்னிட்டு மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வு செய்தார்.


தமிழ்நாடு
மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மூலம் மகளிர் சுய உதவிக்
குழுக்களின் உற்பத்திப் பொருட்களை சந்தைப்படுத்துவதற்கு ஏதுவாக ஒவ்வொரு ஆண்டும் அகில இந்திய அளவில் “சரஸ் மேளா” நடத்தப்பட்டு வருகிறது. இந்தாண்டு மதுரை மாவட்டத்தில் மதுரை தமுக்கம் மைதானத்தில் 22.11.2025 முதல் 03.12.2025 வரை 12 நாட்கள் நடைபெறவுள்ளது. மதுரை சரஸ் மேளாவில் 200 அரங்குகள் அமைக்கப்படவுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலிருந்தும் மற்றும் அகில இந்திய அளவில் பிற மாநிலங்களில் இருந்தும் மகளிர் சுய உதவிக்குழுக்களைச் சார்ந்த 200 கண்காட்சி விற்பனையாளர்கள் கலந்து கொண்டு தங்களது உற்பத்தி பொருட்களை கண்காட்சி அமைத்து விற்பனை செய்ய உள்ளனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button