இராமநாதபுரம் மாவட்டத்தில் சிறந்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் எழுத்தாளர்களுக்கு உதவித்தொகை!!!

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்ததாவது:-
இராமநாதபுரம் மாவட்டத்தில் 2024-2025-ஆம் ஆண்டிற்கு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் கலை இலக்கிய மேம்பாட்டுச்சங்கம் மூலம் சிறந்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் எழுத்தாளர்களுக்கு உதவித்தொகை பெறுவதற்கு இராமநாதபுரம் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் நேரில் வந்து விண்ணப்பப் படிவத்தினை பெற்று விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
விண்ணப்பதாரர்கள் தங்ளது படைப்பினை இரு நகல்களிலும் டிஜிட்டல் முறையிலும் உரிய படிவத்தில் பூர்த்தி செய்து 24.11.2025 அன்று மாலை 5.00 மணிக்குள் இராமநாதபுரம் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் வழங்கி பயன்பெறலாம்.இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



