தமிழகம்மாவட்டச் செய்திகள்

டெல்லி செங்கோட்டை அருகே கார்குண்டு விடுப்பு சம்பவத்தையடுத்து மதுரை விமான நிலையத்தில் 5 அடுக்கு ( கூடுதல்) பாதுகாப்பு!!!

நேற்று இரவு டெல்லி செங்கோட்டை பகுதியில் கார் குண்டு வெடிப்பை தொடர்ந்து 9 பேர் பலியாயினர் .
அதனைத்
தொடர்ந்து,
நாடு முழுவதும் உள்துறை அமைச்சகம் பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரபடுத்த அறிவுறுத்தி உள்ளது.அதனைத் தொடர்ந்து,
நாடு முழுவதும் விமான நிலையம் ரயில் நிலையம் மற்றும் மக்கள் க கூடும் இடங்களை பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது.மதுரை விமான நிலைய உள் வளாகம் மற்றும் வெளி வளாக
பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.அதிவிரைவு அதிரடி படை வீரர்களால் தீவிரமாக கண்காணிக்
கப்படுகிறது.மதுரை விமான நிலையத்திற்கு ஐந்து அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.மதுரை விமான நிலைய உள்வளாகப் பகுதிகளில் விமான நிலைய ஓடுபாதை கண்காணிப்பு கோபுரம் ஆகியவற்றில் மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்களும் மதுரை விமான நிலையம் மற்றும் முன் வளாகம் QRT எனப்படும் அதிவிரைவு அதிரடி படை வீரர்களும் தமிழகப் போலீசாரம் தீவிர பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.மதுரை விமான நிலையத்திற்கு வரும் வாகனங்கள் தீவிர தணிக்கை செய்யப்பட்டு மோப்ப நாய்கள் வரவழைக்கப்பட்டு தீவிர சோதனைக்கு பிறகு அனுமதிக்கப்படுகிறது.

விமான நிலைய வாகன நிறுத்துமிடம் சோதனை சாவடி பகுதிகள் மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்களில் கண்காணிப்பு தீவிர படுத்தப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றது.வெடிகுண்டு தடுப்பு போலீஸார் மற்றும் மோப்ப நாய்கள் வரவழைக்கப்பட்டு விமான நிலைய வளாகம் முழுவதும் தீவிர சோதனை செய்யப்படுகிறது.

அதே போல்,விமான நிலைய வளாகத்திற்குள் வரும் பயணிகள் பார்வையாளர்கள் தீவிர சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும்,விமான நிலையத்திற்கு வரும் வாகனங்கள் தீவிர சோதனைக்கு பின்னே அனுமதிக்கப்படுகிறது.மதுரை விமான நிலையத்தில் மத்திய தொழிற்பாது காப்புபடை மற்றும் காவல்துறை சார்பில் ஐந்து அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது மத்திய உள்துறை அமைச்சகம் மறு ஏற்பாடு உத்தரவு வரும் வரை பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணிகள் தொடரும் என ,
போலீசார் தெரிவித்தனர்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button