தமிழகம்மாவட்டச் செய்திகள்
வாக்காளர் சிறப்பு திருத்தபணிகள்ஆர்.பி. உதயகுமார் பார்வையிட்டார்!!!

மதுரை மாவட்டம், சோழவந்தான் சட்டமன்ற தொகுதிகுட்பட்ட வாடிப்பட்டி வடக்கு ஒன்றியம், சோழவந்தான் பேரூராட்சி, வாடிப்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பணிகளை சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர், ஜெயலலிதா பேரவை செயலாளர் மதுரை புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் ஆர்.பி.உதய குமார் பார்வையிட்டு ,
வாக்குச் சாவடி நிலை அலுவலர்களிடம் விவரங்கள் கேட்டறிந்து அதிமுக பூத் செயலாளர்கள்
கிளைக் கழகச் செயலாளர்களுக்கு ஆலோசனை வழங்கினார். உடன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மாணிக்கம், கருப்பையா, பேரவை மாநிலத் துணைச் செயலாளர் ராஜேஷ் கண்ணா, ஒன்றிய கழகச் செயலாளர்கள் எம் காளிதாஸ்,
கொரியர்
கணேசன், அரியூர் ராதாகிருஷ்ணன், பேரூர் கழகச் செயலாளர்கள் அசோக்குமார், முருகேசன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து
கொண்டனர்.



