வாடிப்பட்டியில்குரல் தேடல் பாடல் போட்டி பரிசளிப்பு!!!

மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் ஆர்.ஆர் மியூசிக்கல் தனியார் அமைப்பு மற்றும் அனாஸ் ரெசார்ட் சார்பில் ஒரு கோடி புதிய குரலின் தேடல் எனும் பாடல் போட்டி நடந்த து. இந்த போட்டியில் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் சேர்ந்த பாடல் பாடும் திறமை உள்ளவர்கள் 200 பேர் கலந்து கொண்டனர்.
இதில் சிறந்த முறையில் பாடல் பாடிய 5 நபர்களை தேர்வு செய்து பரிசு வழங்கப்பட்டது. இந்தப் போட்டிக்கு திரைப்பட பின்னணி பாடகர் எஸ்.என்.சுரேந்தர், பின்னணி பாட கி ரம்யா துரைசாமி மற்றும் டி ஆர் மகாலிங்கம் பேத்தி டாக்டர். பிரபா குருமூர்த்தி ஆகியோர் நடுவர்களா க இருந்து மதுரையை சேர்ந்த பன்னிரண்டாம் வகுப்பு மாணவி ஜீவமரிகா முதல் பரிசு ரூ.25 ஆயிரமும், இரண்டாவது பரிசு ஈரோடு அப்துல் சமத்க்கு ரூ. 20 ஆயிரமும், மூன்றாவது பரிசு
சிவகாசி சதீஷ் பாலன் ரூ.15 ஆயிரமும் உள்ளிட்டவர்களை தேர்வு செய்து மொத்தம் ஐந்து போட்டியாளர்களுக்கு பரிசு கோப்பை மற்றும் பரிசுத்தொகை
வழங்கினர்.



