சூரங்கோட்டை ஊராட்சி ஊரணியில் மீன்கள் உற்பத்தியை அதிகரிக்கும் திட்டம்:மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்!!!

இராமநாதபுரம் மாவட்டம்,இராமநாதபுரம் ஊராட்சி ஒன்றியம், சூரங்கோட்டை ஊராட்சி, இடையர்வலசை கிராமத்தில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை மூலம் ஊரணியில் மீன்கள் உற்பத்தியை அதிகரிக்கும் திட்டத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் துவக்கிவைத்து பார்வையிட்டார்.
சூரங்கோட்டை ஊராட்சி,இடையார்வலசை கிராமத்தில் 30 ஹெக்டேர் பரப்பளவு கொண்ட ஐயர்மடம் ஊரணியில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை மூலம் மீன் உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் 6,000 எண்ணங்கள் மீன்குஞ்சுகள் ஊரணியில் விடப்பட்டு மீன்கள் வளர்க்கும் திட்டத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் துவக்கி வைத்து பார்வையிட்டார்.
மேலும் இராமநாதபுரம் மாவட்டத்தில் நடப்பு ஆண்டில் 80 ஹெக்டேர் பரப்பளவில் மீன்கள் வளர்க்க இலக்கீடு நிர்ணயிக்கப்பட்டு இத்திட்டம் துவங்கப்பட்டுள்ளது. இத்திட்டமானது மீன்வளத்துறை மூலம் கிராமப்புறங்களில் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை கட்டுப்பாட்டில் உள்ள நீர்நிலைகளில் மீன்குஞ்சுகள் இருப்பு செய்தல் திட்டம் செயல்படுத்தப்பட்டு, மீன்கள் உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் இத்திட்டம் செயல்பட்டு வருகிறது. தேர்வு செய்யப்பட்ட ஊராட்சிகளில் உள்ள நீர் நிலையங்களில் மீன்கள் உற்பத்தியை அதிகரித்து பயன்பெற்றிட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் மீன்வளத்துறை துணை இயக்குநர் வேல்முருகன்,உதவி இயக்குநர் இராஜேந்திரன்,இராமநாதபுரம் வட்டார வளர்ச்சி அலுவலர் சோமசுந்தர் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.



