தமிழகம்மாவட்டச் செய்திகள்

இராமநாதபுரத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் எஸ்.ஐ.ஆர்ஐ கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்:தி.மு.க மாவட்ட செயலாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ தலைமையில் 1000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு!!!

இராமநாதபுரத்தில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி சார்பில் இந்திய தேர்தல் ஆணையம் கொண்டு வந்துள்ள எஸ்.ஐ.ஆர் என்னும் வாக்காளர் தீவிர திருத்தம்  பட்டியலில்  நடக்கும் முறைகேட்டை கண்டித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு,திமுக மாவட்ட  செயலாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ தலைமை வகித்தார்.இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில துணைத்தலைவர், தமிழ்நாடு வக்பு வாரிய தலைவர்,இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் கே.நவாஸ்கனி,சட்டமன்ற உறுப்பினர்கள் செ.முருகேசன் (பரமக்குடி),இரா.கருமாணிக்கம் (திருவாடானை ) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்களை படத்தில் காணலாம்….

முன்னாள் அமைச்சர்கள் வ.சத்தியமூர்த்தி,அ.அன்வர் ராஜா,சுந்தரராஜன்,முன்னாள் எம்.பி., எம்.எஸ்.கே.பவானிராஜேந்திரன்,முதுகுளத்தூர் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் கே.முருகவேல்,திமுக இளைஞரணி மாநில துணைச்செயலாளர் இன்பா A.N.ரகு,மாநில நிர்வாகிகள் குணசேகரன்,ராமர்,நல்லசேதுபதி,திமுக தகவல் தொழில் நுட்ப அணி மண்டல அமைப்பாளர் விஜயகதிரவன்,இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர்கள் ராஜாராம் பாண்டியன்,ஜோதிபாலன், மதிமுக மாவட்ட செயலாளர் சுரேஷ்,மாநில நிர்வாகி பேட்ரிக், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் என்.எஸ்.பெருமாள்,மீனவ சங்க அகில இந்திய துணைத்தலைவர் சி.ஆர்.செந்தில்வேல்,மாவட்ட பொதுச்செயலளார் என்.கே.ராஜன், மார்க்சிஸ்ட் மாவட்ட செயலாளர் ஆர்.குருவேல்,செயற்குழு உறுப்பினர்கள் மயில்வாகணன்,கலையரசன்,காசிநாததுரை, விடுதலை சிறுத்தை கட்சி மாவட்ட செயலாளர் அற்புதக்குமார், தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழக மாநில துணைப்பொதுச்செயலாளர் முகவை எஸ்.சலிமுல்லாகான்,எஸ்.டி.பி.ஐ கட்சி கிழக்கு மாவட்ட தலைவர் பெரிய பட்டினம் ரியாஸ்கான்,தொழிலாளர் அணி மாவட்ட அமைப்பாளர் பி.டி.ராஜா,திமுக ஒன்றிய செயலாளர்கள் கே.ஜெ.பிரவீன்,பிரபாகரன்,வாசுதேவன்,நிலோபர்கான்,இராமநாதபுரம் நகர் மன்ற தலைவர் ஆர்.கே.கார்மேகம்,கீழக்கரை துணைத்தலைவர் வழக்கறிஞர் வி.எஸ்.ஹமீது சுல்தான் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் என 1000-க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு தேர்தல் ஆணையம் மற்றும் ஒன்றிய பா.ஜ.க அரசுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button