தமிழகம்மாவட்டச் செய்திகள்

இராமநாதபுரம் மாவட்ட இளைஞர்களுக்கு தன்னார்வ பயிலும் வட்டம் அமைப்பின் மூலம் பயிற்சி:பயன் பெற மாவட்ட ஆட்சியர் அழைப்பு!!!

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்ததாவது:-

மாநில அரசு பணிகளுக்கான போட்டித்தேர்வுகள் மற்றும் ஒன்றிய அரசுப் பணிகளுக்கான போட்டித்தேர்வுகளுக்கு விண்ணப்பித்து தயாராகிவரும் இளைஞர்களுக்காக இராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தன்னார்வ பயிலும் வட்டம் என்ற அமைப்பின் மூலம் பயிற்சி அளிக்கப்பட்டுவருகிறது. இதனில் பல்வேறு போட்டித்தேர்வுகளுக்கான நூல்கள், மாதாந்திர இதழ்கள் மற்றும் நாளிதழ்கள் அடங்கிய நூலகம் செயல்பட்டு வருகிறது.இத்தன்னார்வ பயிலும் வட்டம் மூலமாக போட்டித்தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. இந்த பயிற்சி வகுப்பில் கலந்து கொண்ட பலர் போட்டித்தேர்வில் வெற்றி பெற்று இன்று அரசுப் பணியில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வருகின்றனர்.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு தொகுதி-II & II (A) தேர்விற்கான அறிவிப்பு 15.07.2025ம் தேதி அன்று வெளியிடப்பட்டது. இதில் தொகுதி- II-ல் 50 காலிப்பணியிடங்களும், தொகுதி-II(A)-ல் 595 காலிப்பணியிடங்களும் வெளியிடப்பட்டது. இத்தேர்விற்கான முதல்நிலைத் தேர்வு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் 28.09.2025 அன்று நடத்தி முடிக்கப்பட்டது.

தற்போது, TNPSC GROUP II & II (A) முதன்மைத் தேர்விற்கான இலவச நேரடி பயிற்சி வகுப்புகள் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் 14.11.2025 முதல் வார நாட்களில் காலை 10.00 மணி முதல் 01.00 மணி வரை நடைபெற உள்ளது.

இந்த இலவச பயிற்சி வகுப்பில் பங்கேற்க ஆர்வமும்,விருப்பமும் உள்ள போட்டித்தேர்வுக்கு தயாராகும் இளைஞர்கள் தங்களது புகைப்படம் மற்றும் தேர்வுக்கு விண்ணப்பித்த விவரங்களுடன் கலந்து கொள்ளலாம்.

இப்பயிற்சி தொடர்பாக இராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரிலோ அல்லது 04567-230160 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு முன் பதிவு செய்து இப்பயிற்சி வகுப்பில் பங்கேற்று பயன்பெலாம்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button