உள்நாட்டு மீனவ பட்டதாரி இளைஞர்களை தேர்ந்தெடுத்து பிரத்யேக பயிற்சி:மாவட்ட ஆட்சியர் தகவல்!!!

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்ததாவது:-
மாண்புமிகு அமைச்சர் (மீன்வளம்,நிதி, பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தம்) 12.11.2017 அன்று சட்ட பேரவையில் அறிவித்தன்படி மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை மற்றும் சென்னை அகில இந்திய குடிமைப்பணி தேர்வு பயிற்சி மையம் இணைந்து ஆண்டுதோறும் 20 கடல் மற்றும் உள்நாட்டு மீனவ பட்டதாரி இளைஞர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு குடிமைப்பணிகளுக்கான போட்டித்தேர்வில் கலந்து கொள்ள ஏதுவாக பிரத்யோக பயிற்சி அளித்திடும் திட்டத்தினை செயல்படுத்திட தமிழ்நாடு அரசால் ஆணை வழங்கப்பட்டது.கடல் மற்றும் உள்நாட்டு மீனவ கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் மற்றும் மீனவர் நலவாரிய உறுப்பினர்களின் வாரிசு பட்டதாரி இளைஞாளூகள் இப்பயிற்சி திட்டத்தில் சேர்ந்து பயன் பெறலாம்.இத்திட்டத்தின் கீழ் பயிற்சி பெற விரும்புவோர் விண்ணப்ப படிவம் (Application Form) மற்றும் அரசு வழிகாட்டு நெறிமுறைகளை (Guidelines) மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகங்களில் அலுவலக வேலை நாட்களில் விலையின்றி பெற்று கொள்ளலாம்.விண்ணப்பதாரர் அரசு வழிகாட்டு நெறிமுறைகளின்படி பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்திற்கு பதிவு அஞ்சல் மூலமாகவோ அல்லது நேரடியாகவோ 25.11.2025 மாலை 5.00 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.மேலும் இத்திட்டம் குறித்த கூடுதல் விபரங்களுக்கு சம்பந்தப்பட்ட மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர்கள் அலுவலகங்களை நேரில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



