தமிழகம்மாவட்டச் செய்திகள்
இராமநாதபுரம் மாவட்டத்தில் பதிவு செய்யப்படாத படகுகள்:மாவட்ட ஆட்சியர் தகவல்!!!

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்ததாவது:-
இராமநாதபுரம் மாவட்டத்தில் தற்போது 33 விசைப்படகுகள்,1456 நாட்டுப்படகுகளும் மற்றும் 497 இயந்திரம் பொருத்தப்படாத நாட்டுப்படகுகளும் பதிவு செய்யாமல் இயக்கப்பட்டுவருவது தமிழ்நாடு கடல் மீன்பிடி ஒழுங்குமுறைச் சட்டம், 1983ன் படி குற்றம் என்பதால் பதிவு செய்யப்படாத நாட்டுப்படகுகள் மற்றும் விசைப்படகுகளை 30.11.2025க்குள் பதிவு செய்திட தமிழ்நாடு மீன்வளத்துறையால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எனவே பதிவுசெய்யப்படாத படகு உரிமையாளர்கள் உரிய ஆவணங்களுடன் தங்கள் பகுதியில் அமைந்துள்ள மீன்வளத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு தங்கள் படகுகளை பதிவு செய்து கொள்ளலாம்.இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



