தீவிர முறை திருத்தம்: ஆட்சியர் ஆய்வு!!!

மதுரை மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித் தலைவர் கே.ஜே.பிரவீன் குமார்,தலைமையில்,மதுரை மாவட்டம் 191-மதுரை வடக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட எஸ்.பி.ஐ. அலுவலர் குடியிருப்பில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரமுறைத் திருத்தம் 2026 (SIR) தொடர்பாக வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடுகளுக்கு சென்று வாக்காளர் கணக்கீட்டு படிவங்களை வழங்கும் பணியினை ஆய்வு செய்து பார்வையிட்டார்.

மாநகராட்சி ஆணையாளர் சித்ரா விஜயன்,
உடன் உள்ளார்.
மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித் தலைவர் கே.ஜே.பிரவீன் குமார், தலைமையில்
மதுரை மாவட்டம், 196-திருமங்கலம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட உச்சப்பட்டி கிராமத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரமுறைத் திருத்தம் 2026 (SIR) தொடர்பாக வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடுகளுக்கு சென்று வாக்காளர் கணக்கீட்டு படிவங்களை வழங்கும் பணியினை ஆய்வு செய்து
பார்வையிட்டார்.



