தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வு:மாவட்ட ஆட்சியர் தகவல்!!!

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்ததாவது:-
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வு (ITI level)-II 16.11.2025 அன்று (முற்பகல் மற்றும் பிற்பகல்) இணையவழித் தேர்வாக (Computer Based Test) இராமநாதபுரம் மாவட்டத்தில்,இராமநாதபுரம் வட்டத்தில் முகம்மது சதக் காம்ப்ளக்ஸ் 2வது மாடியில் அமைந்துள்ள “நெக்ஸன் எண்டர்பிரைசஸ்” என்ற ஒரு தேர்வு மையத்தில் மட்டும் தேர்வு நடைபெற உள்ளது, மேற்படி தேர்வில் முற்பகல் 199 நபர்களும் பிற்பகல் 199 நபர்களும் மொத்தம் 398 தேர்வர்கள் தேர்வு எழுத உள்ளனர்.இத்தேர்வு நடைபெறும் தேர்வு மையத்தில் தடையில்லா மின்சார வசதி, இணைய வசதி, தேர்வு மையத்திற்கு சென்றுவர போதுமான அளவு பேருந்து வசதி மற்றும் மருத்துவ வசதியுடன் கூடிய ஆம்புலன்ஸ் ஆகிய அனைத்து வகையான முன்னேற்பாடு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



