இராமநாதபுரத்தில் தேசிய குழந்தைகள் தினம்,சர்வதேச குழந்தைகள் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி!!!

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் சார்பாக தேசிய குழந்தைகள் தினம், சர்வதேச குழந்தைகள் தினம், மற்றும் உலக குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு தினம் கடைபிடிக்கும் விதமாக நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

தேசிய குழந்தைகள் தினம்,சர்வதேச குழந்தைகள் தினம், மற்றும் உலக குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு தினம் நவம்பர் 14-ம் அன்று குழந்தைகளுக்கான நடை விழிப்புணர்வு பேரணி (Walk for Children) பேரணியானது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து பாரதி நகர் வரை சுமார் 2. கி.மீ வரை நடைபெற்றது.இப்பேரணி 250 நபர்கள் கலந்து கொண்டனர். நடைபயணத்தின் போது குழந்தைகள் உரிமைகள் மற்றும் குழந்தைகள் தொடர்புடைய சட்டங்கள் குறித்த பதாகைகள் ஏந்தியும்,பேரணியில் கலைக்குழுவினரால் சிலம்பாட்டம், ஒயிலாட்டம், நாதஸ்வரம் மற்றும் மேளம் மூலம் குழந்தைகள் உரிமைகள் மற்றும் குழந்தைகள் தொடர்புடைய சட்டங்கள் குறித்த விழிப்புணர்வு பாடல்கள் வாயிலாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.பேரணியின் நிறைவில் கலந்து கொண்ட அனைவரும் குழந்தைகள் தின உறுதி மொழி ஏற்று,பேரணியை நிறைவு செய்தனர்.
இப்பேரணியில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பாலசுந்தர்,மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சிவக்குமார்,மாடசாமி தலைவர்,குழந்தைகள் நலக்குழு மற்றும் உறுப்பினர்கள் குரூப்ஸ்கயா, கிருஷ்ணராஜ் மற்றும் செல்வக்குமார்,முதன்மைக் கல்வி அலுவலர் ரெஜினா,மாவட்ட சமூக நல அலுவலர் மா.சுமதி,வட்டார தொழிலாளர் நல அலுவலர் ரூபிணி, குழந்தைகள் வளர்ச்சித்திட்ட அலுவலர் கலா,முதல்வர்கள் சோமசுந்தரம், முஹம்மது தஸ்தகீர் கல்வியியல் கல்லூரி மற்றும் ஆனந்த், C.S.I கல்வியியல் கல்லூரி,கருப்பசாமி TRRM,தேவராஜ் SPEED,ஜெயலெட்சுமி World Vision,ஜெபாஸ்டியன்,தாயகம் குழந்தைகள் இல்ல தத்துவள ஆதார மையம்,சாத்தையா RWDS ஆகிய தொண்டு நிறுவன இயக்குநர்கள் மற்றும் காவல்துறையினர்,குழந்தைகள் பங்கேற்பு துறை சார்ந்த பணியாளர்கள்,குழந்தைகள் பராமரிப்பு இல்ல நிர்வாகிகள் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு பணியாளர்கள்,சைல்ஹெல்ப்லைன் பணியாளர்கள் மற்றும் மேற்கண்ட கல்வியியல் கல்லூரிகளின் மாணவிகள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.



