உலகக்கோப்பை ஜூனியர் ஹாக்கி போட்டிகள் 2025 க்கான ஹாக்கி கோப்பை:அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் வரவேற்றார்!!!


இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் தமிழ்நாட்டில் சென்னை மற்றும் மதுரை ஆகிய இடங்களில் ஆடவர்களுக்கான ஹாக்கி ஜூனியர் உலகக்கோப்பை போட்டியானது 28.11.2025 முதல் 10.12.2025 வரை நடைபெறவிருப்பதையடுத்து வெற்றிக்கோப்பைக்கான பயணமானது தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளப்பட உள்ளது.

இதனைத் தொடர்ந்து மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்கள் சென்னையில் 10.11.2025 அன்று வெற்றிக்கோப்பை சுற்றுப்பயணத்தையும் காங்கேயன் சின்னத்தையும் அறிமுகப்படுத்தி துவக்கி வைத்தார்.

அதைதொடர்ந்து திருநெல்வேலி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் துவங்கி இராமநாதபுரம் மாவட்டம் சீதக்காதி விளையாட்டு மைதானத்திற்கு வந்தடைந்தன.இவ்வெற்றி கோப்பையினை மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன்,திருவாடானை சட்டமன்ற உறுப்பினர் இராம.கருமாணிக்கம் ஆகியோர் முன்னிலையில் வனம் மற்றும் கதர் துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் தலைமையேற்று ஹாக்கி வெற்றி கோப்பையினை வரவேற்று விளையாட்டு மைதானத்தில் வனம் மற்றும் கதர் துறை அமைச்சர் விளையாட்டு வீரர்களுக்கு அறிமுகப்படுத்தி மாவட்ட அளவிலான ஹாக்கி விளையாட்டு போட்டியை துவக்கி வைத்ததுடன்,உலகக்கோப்பை ஜூனியர் ஹாக்கி போட்டிக்கான காங்கேயன் சின்னம் கொண்ட இலட்சினை விளையாட்டு வீரர்களுக்கு மாண்புமிகு வனம் மற்றும் கதர் துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) திவ்யாஷீநிகம்,மாவட்ட வருவாய் அலுவலர் வ.சங்கரநாராயணன்,மண்டல முதுநிலை மேலாளர் வேல்முருகன்,மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரெஜினி,மாவட்ட விளையாட்டு அலுவலர் தினேஷ்குமார் மற்றும் விளையாட்டு சங்க உறுப்பினர்கள்,அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.



