தமிழகம்மாவட்டச் செய்திகள்

பீகாரில் என்.டி.ஏ கூட்டணி வெற்றி:உசிலம்பட்டி பா.ஜ.க. கொண்டாட்டம்!!!

பீகாரில் என்.டி.ஏ. கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றதை அடுத்து உசிலம்பட்டியில் பாஜக மதுரை பெருங்கோட்ட பொறுப்பாளர் கதளி நரசிங்க பெருமாள் தலைமையிலான பாஜகவினர் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
நடந்து முடிந்த பீகார் சட்டமன்றத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று காலை துவங்கியது.

காலை முதலே முன்னிலையில் இருந்த என்.டி.ஏ. கூட்டணி, அறுதி பெரும்பாண்மையுடன் 200 க்கும் அதிகமான தொகுதிகளில் முன்னிலை வகிப்பதோடு, 6 மணி நிலவரப்படி 46 தொகுதிகளில் வெற்றி பெற்றது.
இந்த மாபெரும் வெற்றியை நாடு முழுவதும் உள்ள பாஜக மற்றும் என்டிஏ கூட்டணி கட்சியினர் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடி வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக, மதுரை மாவட்டம், உசிலம்பட்டி தேவர் சிலை முன்பு பாஜக மதுரை பெருங்கோட்ட பொறப்பாளர் கதளி நரசிங்க பெருமாள் தலைமையிலான பாஜக நிர்வாகிகள் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடி மகிழ்ந்தனர்., முன்னதாக உசிலம்பட்டியில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவர், பி.கே.மூக்கையாத்தேவர் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய கதளி நரசிங்க பெருமாள்., பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணி மாபெரும் வெற்றியை பெற்றுள்ளது, கருத்துக்கணிப்புகளை எல்லாம் மீறி 200 க்கும் அதிகமான தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.
இன்று மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆட்சி மலர போகிறது, தொடர்ந்து மக்களுக்கு நல்லாட்சி தந்து கொண்டிருக்கும், ஒரு கூட்டணி ஆட்சியாக தேசிய ஜனநாயக கூட்டணி விளங்கி வருகிறது.
இந்தியா கூட்டணி மிக பெரிய சரிவை சந்தித்துள்ளது.

பாஜக இஸ்லாமியர்களுக்கு எதிரான ஒரு பொய்யான தவறான கருத்தை பரப்புரை செய்து கொண்டிருந்தார்கள்., அதையெல்லாம் மீறி இஸ்லாமிய மக்கள் வசிக்கும் 39 தொகுதிகளில் 31 தொகுதிகளில் என்டிஏ கூட்டணி வெற்றி பெற்றுள்ளது.
எஸ்ஐஆர் யை கொச்சை படுத்தி பேசினார் ராகுல் காந்தி,அவர் அரசியல் வாழ்க்கையை இழந்திருக்கிறார் என்பது இந்த தேர்தல் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன் தொடர்ச்சியாக ஏப்ரல் மாதத்தில் தமிழகம், கேரளா,மேற்கு வங்காளம் உள்ளிட்ட மாநிலங்களில் தேர்தல் நடைபெற இருக்கிறது.இந்த மகத்தான வெற்றி இந்த மூன்று மாநிலங்களிலும் தொடரும்.
தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமையும்,அதற்கான பணிகளை நாங்களும் செய்து வருகிறோம்.
என பேட்டியளித்தார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button