தமிழகம்மாவட்டச் செய்திகள்

இராமநாதபுரத்தில் 72-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா: அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் பங்கேற்பு!!!

இராமநாதபுரத்தில் மாவட்ட கூட்டுறவுத்துறையின் மூலம் 72-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்திகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன்,பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் செ.முருகேசன்,திருவாடானை சட்டமன்ற உறுப்பினர் இராம.கருமாணிக்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

வனம் மற்றும் கதர் துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் தலைமையேற்று 72-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவிற்கான கூட்டுறவு சங்க கொடியினை ஏற்றி வைத்து சிறந்த கூட்டுறவு சங்கங்களுக்கு கேடயம் வழங்கி பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

கூட்டுறவே நாட்டு உயர்வு என்ற பழமொழிக்கேற்ப கிராமப்புற விவசாயிகளுக்கும்,பொதுமக்களுக்கும் பொருளாதார முன்னேற்றத்திற்கு பாலமாக இருந்து வரக்கூடியது கூட்டுறவு சங்கங்கள் ஆகும்.அனைத்து கிராம பகுதிகளிலும் கூட்டுறவு சங்கங்கள் அமைக்கப்பட்டு விவசாயிகளுக்கும்,பொதுமக்களுக்கும் தேவையான பொருளாதார கடன் உதவிகள் மற்றும் வேளாண் இடுபொருட்கள் வழங்கப்படுகிறது.அதிலும் விவசாயிகளுக்கு வசிப்பிட பகுதிகளிலேயே வேளாண் இடுபொருள்கள் வழங்குவதன் மூலம் விவசாய பணிகளை முழுமையாக மேற்கொண்டு விவசாயிகள் பயன்பெறுவதற்கு கூட்டுறவு சங்கங்கள் பெரும் பங்களிக்கிறது.அதே போல் விவசாயிகளுக்கும்,பொதுமக்களுக்கும் குறைந்த வட்டியில் நகை கடனுதவிகள் வழங்கப்படுகிறது.மகளிர்களுக்கு சுழல் நிதி கடனுதவி வழங்கப்படுகிறது.மேலும் கறவை மாடு,ஆடுகள் மானிய திட்டத்தில் வழங்குவதற்கான கடன் உதவிகள் வழங்கப்படுகிறது.விவசாயிகளுக்கு வேளாண் கருவிகள் குறைந்த வாடகையில் வழங்கப்பட்டு வருகிறது.இதுபோல் கிராம பகுதிகளில் வாழும் பொதுமக்களுக்கும்,விவசாயிகளுக்கும் அரசு நலத்திட்டங்கள் முழுமையாக சென்றடைய கூட்டுறவு சங்கங்கள் உறுதுணையாக இருந்து வருகின்றன.அந்த வகையில் கூட்டுறவு சங்கங்களின் செயல்பாடுகளை மேம்படுத்தும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் கூட்டுறவு வார விழா நடத்தப்படுகின்றது.இதன் மூலம் பொதுமக்களுக்கு அரசின் திட்டங்கள் முழுமையாக சென்றடைவதற்கான பணிகள் விரைவுப்படுத்துவது மட்டுமின்றி,தனிநபர் பொருளாதார மேம்பாட்டிற்கான உதவிகளையும் கூட்டுறவு சங்கங்கள் செயல்படுத்தி வருகின்றன.பெண்களின் முன்னேற்றத்திற்கு எண்ணற்ற திட்டங்களை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வழங்கி வருகிறார்கள்.குறிப்பாக புதுமைப்பெண் திட்டம்,நான் முதல்வன் திட்டம்,தமிழ்ப்புதல்வன் திட்டம்,காலை உணவு திட்டம்,முதல்வர் மருந்தகம்,தாயுமானவர் திட்டம் என எண்ணற்ற திட்டங்களை வழங்கி வருவதுடன்,மகளிர் குழுக்கள் மூலம் பெர்கள் முன்னேற்றம் பெறும் வகையில் சுழல் நிதி கடன் திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.மக்கள் எளிதாக வங்கிகளுக்குச் சென்று பயன்பெறும் வகையில் கூட்டுறவு வங்கி இருந்து வருகிறது.இந்த வங்கியின் மூலம் விவாயிகள் பயிர் கடன் பெறவும், மீளவர்கள் கடன் உதவி பெறவும்,விவசாயிகளுக்கு தேவையான உரம்,விதைகள் மற்றும் தொழில்நுட்ப உபகரணங்கள் பெற்று பயன்பெறும் வகையில் இருந்து வருகின்றன.அதுமட்டுமின்றி மானியத்தில் கடன் திட்ட உதவிகள் மற்றும் நகை கடன் தள்ளுபடி திட்டம் என எண்ணற்ற சலுகைகள் கூட்டுறவு சங்கங்கள் மூலம் வழங்கப்பட்டு வருகின்றன.மேலும் நியாய விலைக்கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு சிறந்த முறையில் பொருட்கள் வழங்குவதுடன்,தற்பொழுது தாயுமானவர் திட்டம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் துவக்கி வைக்கப்பட்டு,வயதானவர்கள்,மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கு சென்று உளணவுப்பொருட்கள் வழங்கப்படுகிறது.ஏழை,எளியோர் பயன் பெறும் வகையில் முதல்வர் மருத்தகம் திட்டம் துவங்கப்பட்டு சிறப்பான சேவை வழங்கப்பட்டு வருகிறது.ஒவ்வொரு துறையிலும் முத்தான திட்டங்கள் வழங்கி தமிழகம் சிறந்து விளங்கி வருகின்றன.பொருளாதார முன்னேற்றத்தில் தமிழ்நாடு இரண்டாவது இடத்தில் உள்ளது என்றால் அதற்குக் காரணம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் திட்டங்களே ஆகும்.பெண்களின் முன்னேற்றத்தில் சிறப்பு கவனம் எடுக்கக் கூடியவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களே.கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்ற பழமொழிக்கேற்ப கூட்டுறவு சங்கங்கள் மூலம் அரசு நலத்திட்ட உதவிகள் பெற்று ஒவ்வொருவரும் பொருளாதார முன்னேற்றம் அடைந்து சிறப்புடன் வாழ்ந்தி வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக கூட்டுறவு வார விழாவையொட்டி உறுதிமொழி சங்கங்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டது.நியாயவிலைக்கடை அதனைத்தொடர்ந்து சிறந்த the may விற்பனையாளர்களுக்கு பாராட்டுச்சான்று மற்றும் கேடயம் வழங்கி அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் பாராட்டினார்.தொடர்ந்து கலை பணிபாட்டு துறையின் மூலம் லோகநாதன் கலைக்குழுவின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.பின்னர் கூட்டுறவு சங்கம் மூலம் 1413 பயனாளிகளுக்கு மகளிர் சுய உதவிக் குழு கடன் ரூ.1133.87 இலட்சம் மதிப்பீட்டிலும்,45 பயனாளிகளுக்கு மாற்று திறனானிகள் கடன் ரூ.21.50 இலட்சம் மதிப்பீட்டிலும்,01பயனாளிகளுக்கு டாம்கோ அட ரூ.3.50 இலட்சம் மதிப்பீட்டிலும்,12 பயனாளிகளுக்கு கைம்பெண்கள் கடன் ரூ.4.75 இலட்சம் மதிப்பீட்டிலும்,08 பயனாளிகளுக்கு நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு ரூ.3.25 இலட்சம் மதிப்பீட்டிலும்,01 பயனாளிக்கு சிறு,குறு நடுத்தா தொழிலாளர்களுக்கு ரூ.0.50 இலட்சம் மதிப்பீட்டிலும்,01 பயனாளிக்கு ஆட்டோ ரூ.3.5 இலட்சம் மதிப்பீட்டிலும்,01 பயனாளிக்கு கலைஞர் கைலினை திட்டம் ரூ.0.50 இலட்சம் மதிப்பீட்டிலும், 1091 பயனாளிகளுக்கு கே.சி.சி கடன் ரூ.1174.75 இலட்சம் மதிப்பீட்டிலும்,276 பயனாளிகளுக்கு கால்நடை பராமரிப்பு கடன் ரூ.454.19 இலட்சம் மதிப்பீட்டிலும்,271 பயனாளிகளுக்கு மீன்வளக்கடன் ரூ.224.45 இலட்சம் மதிப்பீட்டிலும்,62 பயனாளிகளுக்கு நகர கூட்டுறவு வங்கி கடன் ரூ.58.95 இலட்சம் மதிப்பீட்டிலும்,என மொத்தம் 3183 பயனாளிகளுக்கு ரூ.30906.25 இலட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் கூட்டுறவு சங்கங்களின் மணிடன் இணைப்பதிவாளர் ஜினு,இணைப்பதிவாளர் மேலாண்மை இயக்குநர் இராஜலட்சுமி,இராமநாதபுரம் நகர் மன்றத் தலைவர் ஆர்.கே.கார்மேகம்,துணை பதிவாளர்கள் இராஜகுரு,ரத்தினவேல்,ரிச்சர்டு ராஜா,அன்பரசி,இராமநாதபுரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி பொதுமேலாளர் வானதி,கூட்டுறவு பயிற்சி நிலையம் முதல்வர் ரகுபதி,கூட்டுறவு சங்க கண்காணிப்பு அலுவலர்கள் காளிதாஸ்,இராஜேஸ்வரி மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button