தமிழகம்மாவட்டச் செய்திகள்
இராமநாதபுரம் ஆயுதப்படையில் சரக டி.ஐ.ஜி வருடாந்திர ஆய்வு!!!

இராமநாதபுரம் மாவட்ட ஆயுதப்படையில் இராமநாதபுரம் சரக காவல்துறை துணைத்தலைவர் முனைவர் பா.மூர்த்தி வருடாந்திர ஆய்வு மேற்கொண்டார்.

ஆய்வின்போது,ஆயுதப்படை காவலர்கள் பயன்படுத்தும் உடை பொருட்கள்,உபகரணங்கள் மற்றும் இராமநாதபுரம் மாவட்டத்தின் அனைத்து காவல் வாகனங்களும் பரிசோதிக்கப்பட்டது.

பின்னர்,காவல் அதிகாரிகள் மற்றும் ஆளுநர்களின் குறைகள் குறித்து கேட்டறிந்து மனுக்களை பெற்றுக் கொண்டார்.தொடர்ந்து ஆயுதப்படையின் ஆயுத வைப்பறை பராமரிப்பு மற்றும் பதிவேடுகளை ஆய்வு செய்து அறிவுரைகள் வழங்கினார்.இந்த நிகழ்வில் இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜி.சந்தீஷ் ஐ.பி.எஸ் உடனிருந்தார்.



