பீகாரில் வெற்றி பெற்றது போல தமிழ்நாட்டில் வெற்றி பெற்று விடலாம் என பா.ஜ.க நினைத்தால் அது ஒரு போதும் நடக்காது:கீழக்கரையில் நடந்த பாகமுகவர்கள் மாநாட்டில் எஸ்.டி.பி.ஐ கட்சி தமிழ் மாநில தலைவர் நெல்லை முபாரக் பேட்டி!!!

பீகாரில் வெற்றி பெற்றது போல தமிழ்நாட்டில் வெற்றி பெற்று விடலாம் என பாஜக நினைத்தால் அது ஒருபோதும் நடக்காது.தமிழ்நாடு மக்கள் மின் தெளிவானவர்கள் கீழக்கரையில் எஸ்.டி.பி.ஐ. மாநிலத்தலைவர் நெல்லை முபாரக் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இராமநாதபுரம் மாவட்டம்,கீழக்கரையில் எஸ்.டி.பி.ஐ கட்சியின் பாகமுகவர்கள் மாநாடு தனியார் மஹாலில் நடைபெற்றது.மதுரை மண்டல பொறுப்பாளர் எஸ்.அகமது நவவி தலைமை வகித்தார்.இராமநாதபுரம் கிழக்கு மாவட்டத்தலைவர் பெரியபட்டினம் எஸ்.ரியாஸ்கான் வரவேற்புரையாற்றினார்.மேற்கு மாவட்டத்தலைவர் ஜெ.நூருல் அமீன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.இதனை தொடர்ந்து,கட்சியின் தமிழ் மாநிலத்தலைவர் நெல்லை முபாரக் பாக முகவர்கள் செயல்பாடுகள் குறித்து சிறப்புரையாற்றினார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்ததாவது:-
மத்திய அரசின் கைப்பாவையாக தேர்தல் ஆணையம் கொண்டு வந்துள்ள எஸ்.ஐ.ஆர் நடவடிக்கையை உடனே திரும்ப பெற வேண்டும்.பொருத்தமில்லாத நேரத்தில் அவசர கோலத்தில் திட்டமிட்டு மக்களை குழப்பிடவே தேர்தல் ஆணையம் எஸ்.ஐ.ஆர் கொண்டு வந்துள்ளது.வாக்காளர்கள் படிவங்கள் இன்று வரை முறையாக வழங்கப்படவில்லை.டிசம்பர் 9-ம் தேதிக்குள் வரைவு வாக்காளர் பட்டியல் எப்படி வெளியிட முடியும்.அது சரியாக இருக்காது.உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளோம். பீகார் மாநிலத்தில் தேர்தல் முடிவுகள் வந்துள்ளது.இரண்டு விஷயங்களை எஸ்.ஐ.ஆர் என்ன செய்யும் என்பதை உணர்த்தியுள்ளது.தேர்தல் ஆணையத்தை கையில் வைத்துக்கொண்டு யார்? வெற்றி பெற வேண்டும் என்பதை முன் கூட்டியே திட்டமிட்டுள்ளனர்.தேர்தல் முன்பு வரையில் இண்டியா கூட்டணி ஒற்றுமையுடன் செயல்படுகிறது.தேர்தல் வந்தவுடன் அவர்களுக்குள் உள்ள குழப்பங்கள் மூலமே பா.ஜ.க வெற்றி பெறுகிறது.பீகாரில் வெற்றி பெற்று விட்டோம் தமிழகத்தில் நாங்கள் வெற்றி பெற்றிடுவோம் என பா.ஜ.க-வினர் கூறுகின்றனர்.அது ஒரு போதும் தமிழகத்தில் நடக்காது.தமிழக மக்கள் தெளிவானவர்கள்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இக்கூட்டத்திற்கு,நிர்வாகிகள் பாத்திமா கனி,அப்துல்சமது,முஜிபுர் ரகுமான்,சிவகங்கை மாவட்டத்தலைவர் அப்துல்கலாம்,செயலாளர் அஹமதுஅலி,இராமநாதபுரம் மேற்கு மாவட்ட செயலாளர் பாஞ்சுபீர் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
8 தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.



