வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பான கணக்கிட்டு படிவம் பதிவேற்றம்:தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் பார்வையிட்டு ஆய்வு!!!

இராமநாதபுரம் மாவட்டம், இராமநாதபுரம் மற்றும் முதுகுளத்தூர் வட்டத்தில் மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பான கணக்கீட்டு படிவம் பூர்த்தி செய்து திரும்பப் பெறப்பட்டு வருவதையும் மற்றும் கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருவதையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.இந்த ஆய்வின்போது மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் முதுகுளத்தூர் வட்டம்,முதுகுளத்தூர் மற்றும் காக்கூர் பகுதிகளில் வாக்காளர்களுக்கு வழங்கப்பட்ட கணக்கீட்டு படிவம் பூர்த்தி செய்து மீள பெற்று வருவதை பார்வையிட்டதுடன்,வாக்காளர்களிடம் தங்களுக்கு வழங்கப்பட்ட கணக்கீட்டு படிவங்களை விரைந்து பூர்த்தி செய்து வழங்கிட அறிவுறுத்தினார்.


அதனைத் தொடர்ந்து,இராமநாதபுரம் நகராட்சி அலுவலகம் மற்றும் இராமநாதபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வாக்காளர்களிடமிருந்து பூர்த்தி செய்யப்பட்டு பெறப்பட்ட கணக்கீட்டு படிவம் கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருவதை பார்வையிட்டதுடன்,ஒவ்வொரு நாளும் பெறக்கூடிய படிவங்களை அவ்வப்போது பதிவேற்றம் செய்திட வேண்டும் என அலுவலர்களுக்கு மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவுறுத்தினார்.



