தமிழகம்மாவட்டச் செய்திகள்

இருமுடி திருவிழாவிற்கு விரைவு ரயில்கள் மேல்மருவத்தூரில் நின்று செல்லும்!!!

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் டிசம்பர் 15 முதல் பிப்ரவரி 2 வரை தைப்பூச இருமுடி திருவிழா நடைபெற இருக்கிறது. எனவே பயணிகள் வசதிக்காக டிசம்பர் 15 முதல் டிசம்பர் 31 வரை புறப்பட வேண்டிய மதுரை – சென்னை – மதுரை வைகை எக்ஸ்பிரஸ் (12636/12635), சென்னை – மதுரை பாண்டியன் எக்ஸ்பிரஸ் (12637), டெல்லி ஹஜ்ரத் நிஜாமுதீன் – கன்னியாகுமரி திருக்குறள் எக்ஸ்பிரஸ் (12642), சென்னை – செங்கோட்டை பொதிகை எக்ஸ்பிரஸ் (12661), சென்னை – கொல்லம் எக்ஸ்பிரஸ் (16101), தாம்பரம் – ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் (16103), செங்கோட்டை – தாம்பரம் சிலம்பு எக்ஸ்பிரஸ் (20684), தாம்பரம் – நாகர்கோவில் அந்தியோதயா எக்ஸ்பிரஸ் (20691), தாம்பரம் நாகர்கோவில் தாம்பரம் விரைவு ரயில் (22657/22658) ஆகிய ரயில்கள் மேல்மருவத்தூரில் நின்று செல்லும். அதேபோல மறு மார்க்கத்தில் டிசம்பர் 14 முதல் டிசம்பர் 31 வரை புறப்பட வேண்டிய
மதுரை – சென்னை பாண்டியன் எக்ஸ்பிரஸ் (12638) செங்கோட்டை – சென்னை பொதிகை எக்ஸ்பிரஸ் (12662), கொல்லம் – சென்னை எக்ஸ்பிரஸ் (16102), ராமேஸ்வரம் – தாம்பரம் எக்ஸ்பிரஸ் (16104), பனாரஸ் – கன்னியாகுமரி காசி தமிழ்ச் சங்கம் எக்ஸ்பிரஸ் (16368), செங்கோட்டை – சென்னை சிலம்பு எக்ஸ்பிரஸ் (20682), நாகர்கோவில் – தாம்பரம் அந்தியோதயா எக்ஸ்பிரஸ் (20692), ராமேஸ்வரம் – புவனேஸ்வர் எக்ஸ்பிரஸ் (20850), ராமேஸ்வரம் – பனாரஸ் எக்ஸ்பிரஸ் (22536), ராமேஸ்வரம் – அயோத்தியா கண்டோன்மெண்ட் எக்ஸ்பிரஸ் (22613), தஞ்சாவூர் வழி சென்னை – மதுரை எக்ஸ்பிரஸ் (22623), பிகானேர் எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்களும் மேல்மருவத்தூர் நின்று செல்லும். டிசம்பர் 18 முதல் 31 வரை புறப்பட வேண்டிய மதுரை – பிகானேர் எக்ஸ்பிரஸ் (22631), தஞ்சாவூர் வழி மதுரை – சென்னை எக்ஸ்பிரஸ் (22624), கன்னியாகுமரி பனாரஸ் தமிழ் சங்கம் எக்ஸ்பிரஸ் (16367), சென்னை நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் (12667),
டிசம்பர் 17 முதல் 31 வரை புறப்பட வேண்டிய அயோத்தியா கண்டோன்மென்ட் – ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் (22614), ராமேஸ்வரம் – பனாரஸ் எக்ஸ்பிரஸ் (22535), மும்பை லோக மான்ய திலக் – மதுரை எக்ஸ்பிரஸ் (22101), கன்னியாகுமரி – டெல்லி ஹஸ்ரத் நிசாமுதீன் திருக்குறள் எக்ஸ்பிரஸ் (12641),
டிசம்பர் 19 முதல் 31 வரை புறப்பட வேண்டிய மதுரை – லோக மான்ய திலக் எக்ஸ்பிரஸ் (22102), புவனேஸ்வர் – ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் (20849), நாகர்கோவில் – சென்னை விரைவு ரயில் (12668),
டிசம்பர் 16 முதல் 31 வரை புறப்பட வேண்டிய ராமேஸ்வரம் – பிரோஸ்பூர் எக்ஸ்பிரஸ் (20497), மதுரை – டெல்லி ஹஸ்ரத் நிஜாமுதீன் மதுரை எக்ஸ்பிரஸ் (12651/12652),
டிசம்பர் 13 முதல் 31 வரை புறப்பட வேண்டிய பிரோஸ்பூர் – ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் (20498) ஆகிய ரயில்களும் மேல்மருவத்தூரில் நின்று செல்லும்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button