இராமேஸ்வரத்தில் மேல்நிலைப்பள்ளி மாணவி கொலை:பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் மாணவியின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல்!!!

இராமநாதபுரம் மாவட்டம்,இராமேஸ்வரம் சேராங்கோட்டை பகுதியில் காதலிக்க மறுத்த மேல்நிலைப்பள்ளி மாணவி ஷாலினி கொலை செய்யப்பட்டார்.அதனைத் தொடர்ந்து உயிரிழந்த மாணவி குடும்பத்தினரை பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் ஆணைக்கிணங்க இராமநாதபுரம் கிழக்கு மாவட்ட செயலாளர் தேனி சை.அக்கிம் இராமேஸ்வரம் நகர் செயலாளர் M.M.M.முருகன்,மண்டபம் ஒன்றிய செயலாளர் N.மக்தும் கான்,மாவட்ட இளைஞர் சங்க செயலாளர் V.பிரவீன் குமார் ஆகியோர் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்து,குடும்பத்திற்கு தேவையான உதவிகளை செய்வதாக உறுதியளித்தனர்.

அப்போது உயிரிழந்த மாணவியின் குடும்பத்தினர்கள் அந்த பகுதியில் இரவு,பகல் பாராது மது விற்பனை நடைபெறுகிறது,அந்தப் பகுதியில் மேல்நிலைப்பள்ளி வகுப்புகள் இல்லை,அப்படி இருந்திருந்தால் இந்த சம்பவம் நடந்திருக்காது.அந்த பகுதி மக்களிடம் மேல்நிலைப்பள்ளி வகுப்புகள் கொண்டு வருவதாக பொதுமக்களிடம் பணம் வசூல் செய்தும் கொண்டு வரவில்லை.முறையான பேருந்து வசதி இல்லை என்பது உள்ளிட்ட பல்வேறு குறைகளை தெரிவித்தனர்.அதனை கேட்டுக் கொண்டு இது தொடர்பாக இன்று காலை 11 மணிக்கு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரை நேரில் சந்தித்து குற்றவாளியின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து கேட்டறிந்து செய்தியாளர்களை சந்தித்து அப்பகுதி மக்களின் கோரிக்கைகளை எடுத்துரைத்து அரசு நடவடிக்கை எடுக்க வழிவகை செய்வதாகவும் கூறினர்.இது தொடர்பாக உயிரிழந்த மாணவியின் குடும்பத்திற்கு அரசு சார்பில் ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க பா.ம.க தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.



