இராமநாதபுரம் மாவட்ட தோட்டக்கலைத்துறை மூலம் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்கள்:தமிழ்நாடு முதல்வருக்கு பயனாளி நெஞ்சார்ந்த நன்றி!!!

தமிழ்நாடு அரசின் சார்பில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் மூலம் பல்வேறு திட்டங்கள் விவசாயிகளின் வருமானத்தை பெருக்க செயல்படுத்தப்பட்டு வருகின்றன.இராமநாதபுரம் மாவட்டத்தில் மிளகாய்,கொத்தமல்லி,தென்னை மற்றும் பனை போன்ற தோட்டக்கலைப் பயிர்கள் அதிகம் சாகுபடி செய்யப்படுகிறது.தேசிய தோட்டக்கலை இயக்கம் திட்டத்தில் பரப்பு விரிவாக்கம் இனத்தின் கீழ் குழித்தட்டு மூலம் உற்பத்தி செய்யப்படும் வீரிய இரக மிளகாய் நாற்றுகள்,தக்காளி,கத்தரிக்காய் போன்ற வீரிய காய்கறி நாற்றுகள் மற்றும்மா,கொய்யா போன்ற பழச்செடிகள் தோட்டக்கலைத் துறையின் மூலம் விவசாயிகளுக்கு மானியத்தில் வழங்கப்படுகிறது.மேலும் பண்ணைக்குட்டை அமைத்தல்,தேனீ வளர்ப்புபெட்டி,நிழல் வலைகுடில்,பறவை தடுப்புவலை,நிரந்தர மண்புழுஉரம் தயாரிப்பு கூடம்,குறைந்த விலையில் வெங்காய சேமிப்பு கிடங்கு,நடமாடும் காய்கறி விற்பனைவண்டி போன்றவைகளுக்கு மானியம் வழங்கப்படுகிறது.தேசிய நுண்ணீர் பாசன திட்டத்தில் சொட்டுநீர்,தெளிப்புநீர் பாசன அமைப்புகள் அமைக்க சிறு,குறு விவசாயிகளுக்கு 100% மானியம்,இதர விவசாயிகளுக்கு 75% மானியமும் வழங்கப்படுகிறது.மாநில தோட்டக்கலை அபிவிருத்தி திட்டத்தின் கீழ்மாடித்தோட்ட தொகுப்பு,பாரம்பரிய காய்கறித்திட்டங்கள்,தென்னை பரப்பு விரிவாக்கம் ஆகியவை செயல்படுத்தப்படுகிறது.தேசிய வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் மூலம் பந்தல் அமைத்தல் மற்றும் முருங்கை பரப்பு விரிவாக்கம் போன்ற இனங்களில் விவசாயிகளுக்கு 50% மானியம் வழங்கப்படுகிறது.ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கத் திட்டத்தில் ஆறு வகையான காய்கறி விதைகள் தொகுப்பு மற்றும் பழச்செடிகள் தொகுப்பு 100% மானியத்தில் வழங்கப்பட்டு வருகிறது.கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் மூலம் வீரிய காய்கறி விதைகள்,தென்னங்கன்றுகள் மற்றும் பழச்செடிதொகுப்புகள் விவசாயிகளுக்கு மானியத்தில் வழங்கப்படுகிறது.புனை மேம்பாட்டு இயக்கம் திட்டத்தில் பனை விதைகள்,கன்றுகள் வழங்குதல்,பனை மதிப்பு கூட்டுப்பொருட்கள் தயாரிக்கும் கூடம் அமைத்தல் போன்றவைகளுக்கு மானியம் வழங்கப்படுகிறது.தோட்டக்கலைத்துறையின் மூலம் கடந்த 5 ஆண்டுகளில் 1,43,269 பயனாளிகளுக்கு பல்வேறு திட்டங்களின் மூலம் ரூ.12.85 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
திருப்புல்லாணி ஒன்றியம் மாயாகுளம் கிராமத்தைச் சேர்ந்த ச.பெரியசாமி தெரிவிக்கையில்:-
நான் எனது கிராமத்தில் விவசாயம் செய்து வருகின்றேன்.தோட்டக் கலைத்துறையின் மூலம் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்கள் தொடர்பாக எனது கிராமத்தில் உள்ளவர்கள் சொல்லக்கேட்டு தோட்டக்கலைத்துறை அலுவலர்களை அணுகி பனை மேம்பாட்டு இயக்க திட்டம் தொடர்பாக கேட்டறிந்தேன்.அதனைத்தொடர்ந்து எனது கிராமத்தில் பனை மேம்பாட்டு இயக்க திட்டத்தில் மதிப்பு கூட்டுப்பொருட்கள் தயாரிப்புக் கூடம் அமைத்து ரூ.50000/-மானியம் பெற்று அதன் மூலம் மதிப்புக் கூட்டுதலை எளிமையாக்கி தரம் நிறைந்த கருப்பட்டி தயாரித்து விற்பனை செய்து வருகின்றேன்.இதன் மூலம் கூடுதல் இலாபம் பெற்று வருகின்றேன்.இத்திட்டத்தின் மூலம் என்னைப்போன்ற நடுத்தர விவசாயிகளின் வாழ்வில் முன்னேற்றம் காணும் வகையில் திட்டங்களை அறிவித்து அதனை செயல்படுத்தி வரும் தமிழ்நாடு முதலமைச்சருக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்தார்.



