சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி த.மு.மு.க இணைந்து மாபெரும் ரத்ததான முகாம்!!!

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சிவகங்கை நகரம் மற்றும் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி இணைந்து மாபெரும் ரத்ததான முகாம் நடத்தினர்.இந்நிகழ்வில் 50 யூனிட் ரத்தம் தானமாக வழங்கப்பட்டது.
இந்த ரத்ததான முகாமை சிவகங்கை சமஸ்தானம்,தேவஸ்தானம் பரம்பரை அறங்காவலர் ஸ்ரீ ராமானுஜ தாசி மேதகு ராணி சாகிபா ஸ்ரீமத் முத்து விஜய ரகுநாத கௌரி மதுராந்தகி நாச்சியார் தலைமையேற்று துவக்கி வைத்தார்.
த.மு.மு.க மாநில செயலாளர் தொண்டி சாதிக் பாட்ஷா த.மு.மு.க தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் எம்.எல்.ஏ கொடுத்தனுப்பிய நபிகளாரின் சமுக உறவு புத்தகம் மேதகு ராணிக்கு வழங்கி கௌரவப்படுத்தினார்.த.மு.மு.க மாவட்ட தலைவர் துல்கர்னை சேட்,
மாவட்ட செயலாளர் இம்ரான் கான்,மாவட்ட பொருளாளர் அன்சாரி,ஆர்.சி நடுநிலைப்பள்ளி தாளாளர் அருட்தந்தை ஜெபமாலை
மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் அப்துல் முத்தலிப்,மருத்துவ சேவை அணி மாவட்ட செயலாளர் டாக்டர்.ஹாஜா மைதீன்,மாவட்ட பொருளாளர் பிலால்,மண்டல தொண்டர் அணி செயலாளர் ராஜா முஹம்மது,
த.மு.மு.க,ம.ம.க நகர் தலைவர் சவுக்கத் அலி,நகர் செயலாளர் சித்திக் முஹம்மது,த.மு.மு.க நகர் செயலாளர் ஷேக் பகுருதீன்,மனிதநேய மக்கள் கட்சி நகர் பொருளாளர் முஹம்மது மன்சூர் அலி,த.மு.மு.க நகர் மருத்துவ சேவை அணி செயலாளர் நசிருதீன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் மாற்றுக் கட்சியைச் சேர்ந்த ஏராளமானோர் மாநில செயலாளர்,மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையில் தங்களை இணைத்துக் கொண்டனர்.முடிவில் நகர் தலைவர் சௌக்கத் அலி நன்றி கூறினார்.



