இராமநாதபுரத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்:கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமையில் நடைபெற்றது!!!

இராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் பொதுமக்களிடம் பல்வேறு கோரிக்கைகள் குறித்த 185 மனுக்கள் பெற்று மனுதாரரின் முன்னிலையில் மனுக்களை விசாரணை செய்து தொடர்புடைய அலுவலர்களிடம் மனுக்களை வழங்கி உரிய நடவடிக்கையினை விரைந்து மேற்கொள்ள அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
இக்கூட்டத்தில் வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, தனிநபர் வீடு வழங்கும் திட்டம், குடிநீர் இணைப்பு வழங்குதல் உள்ளிட்டவை தொடர்பாக பொதுமக்கள் மனுக்களை அளித்தனர். மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவிக்கையில், ஒவ்வொரு வாரமும் பொதுமக்களிடம் பெறக்கூடிய மனுக்களுக்கு உரிய நடவடிக்கை மேற்கொண்டு ஒருமாத காலத்திற்குள் மனுதாரர்களுக்கு உரிய தீர்வு வழங்கிட வேண்டும் எனவும், தீர்வு வழங்க முடியாத மனுக்கள் நிலை குறித்து மனுதாரர்களிடம் அலுவலர்கள் எடுத்துரைக்க வேண்டும் எனவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். மேலும் பொதுமக்கள் வழங்கும் மனுக்களுக்கு துறைசார்ந்த அலுவலர்கள் சிறப்பு கவனம் எடுத்து செயல்பட வேண்டுமென மாவட்ட கலெக்டர் தெரிவித்தார்.

தொடர்ந்து இந்திய தேர்தல் ஆணையத்தின்படி SIR கணக்கீட்டு பணி நடைபெற்று வருவதையொட்டி இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி(தனி) சட்டமன்றத் தொகுதியில் குறுகிய காலத்தில் 100 சதவீதம் குறியிட்டை விரைவாக பணி மேற்கொண்டமைக்காக வாக்குசாவடி நிலை அலுவலர்கள் ஜெயந்தி மற்றும் செந்தூர் பாண்டியன் மற்றும் மேற்பார்வையாளர்கள் மஞ்சுளா,சரண்யா ஆகியோர்களுக்கு மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் பாராட்டு சான்று வழங்கி பாராட்டினார்.


இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் வ.சங்கரநாராயணன்,மாவட்ட சமூக பாதுகாப்புத்திட்ட தனித்துணை கலெக்டர் கிருஷ்ணகுமாரி,மாவட்ட கலெக்டர் நேர்முக உதவியாளர் (நிலம்) ரகுபதி,மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.



