தமிழகம்மாவட்டச் செய்திகள்

இராமநாதபுரம் மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகுக்கு 2025ம் ஆண்டிற்கான குழந்தைகள் நலன் – சேவை விருது:மாவட்ட கலெக்டரிடம் வாழ்த்து!!!

சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை,குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறையின் கீழ் குழந்தைத் திருமணம்,குழந்தை கடத்தல்,குழந்தைகளை யாசகம் பெற பயன்படுத்துதல்,உடல் மற்றும் மன ரீதியாக தீங்கு இழைத்தல்,குழந்தை தொழிலாளர் ஆகியோரை கண்டறிந்து மீட்பு மற்றும் மறுவாழ்வு அளிக்க உரிய நடவடிக்கை மேற்கொள்வதோடு மட்டுமல்லாமல்,பல்வேறு துறைகளுக்கிடையே சிறந்த ஒருங்கிணைப்பை ஏற்படுத்தி குழந்தைகள் நலன் சார்ந்த சேவைகளை இராமநாதபுரம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு வழங்கி வருகிறது.இவ்வலகின் சிறந்த முன்னெடுப்புகளை அங்கீகரிக்கும் விதமாக 2025 ஆம் ஆண்டிற்கான குழந்தைகள் நலன் – சேவை விருது கடந்த 27.11.2025 அன்று தலைமை செயலகத்தில் நடைபெற்ற விழாவில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ந.சிவக்குமார் தமிழ்நாடு முதலமைச்சர் விருதினைப் பெற்றார்.இராமநாதபுரம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு பணியாளர்கள் மாவட்ட கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோனை சந்தித்து வாழ்த்துக்கள் பெற்றனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button