மாவட்டச் செய்திகள்

இராமநாதபுரத்தில் அரசு வாகனம் ஏலம்!!!

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்ததாவது:-

இராமநாதபுரம் மாவட்ட சமூக நல அலுவலகத்தில் இயங்கிய ஜீப் இன்று (அக்.28-ல்) பொதுமக்கள் முன்னிலையில் பொது ஏலம் விடப்படுகிறது.

ஏலம் எடுக்க விரும்புவோர் மாவட்ட சமூக நல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம்,இராமநாதபுரத்தில் இன்று காலை 10:30 முதல் 11:30 மணிக்குள் முன் வைப்புத் தொகை ரூ.2000 செலுத்தி மதியம் 12:00 மணிக்கு நடைபெறும் ஏலத்தில் பங்கேற்கலாம்.ரூ.20 ஆயிரத்திற்கு மேல் நிர்ணயம் செய்து விற்பனை நடைபெறும்.ஏலம் எடுத்தவர் தொகையில் 100 சதவீதம்,அதற்கான ஜி.எஸ்.டி தொகையை அன்றே செலுத்த வேண்டும்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button