மாவட்டச் செய்திகள்
இராமநாதபுரம் மாவட்டத்தில் ட்ரோன்கள் பறக்க தடை!!!

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் செய்திக்குறிப்பில் தெரிவித்ததாவது:-
இந்திய துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் இராமநாதபுரம் மாவட்டத்திற்கு வருகை தருவதை முன்னிட்டு பாதுகாப்பு காரணம் கருதி இராமநாதபுரம் மாவட்ட எல்லைப் பகுதிகளில் 30-10-2025 அன்று ட்ரோன்கள் பறக்க தடைவிதிக்கப்படுகிறது.

எனவே 30-10-2025 அன்று தடையை மீறி டிரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்கவிடும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



