இராமநாதபுரத்தில் தமிழ் புலிகள் கட்சி போராட்டம்!!!

இராமநாதபுரம் மாவட்டம்,ஆர்.எஸ்.மங்கலம் அருகேயுள்ள கைலாச சமுத்திரத்தில் வசிக்கும் பட்டியலின மக்களுக்கு பாத்தியப்பட்ட மயானத்தை அழித்து பாதையாக மாற்றும் சிலர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழ் புலிகள் கட்சியின் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலக முற்றுகை போராட்டம் நடைபெற்றது.


அமைப்பின் மாநில இளம் புலி அணி செயலாளர் தமிழ் முருகன் தலைமை தாங்கினார்.திருவாடானை சட்டமன்ற தொகுதி மாவட்ட செயலாளர் சுரேஷ்,இராமநாதபுரம் தொகுதி மாவட்ட செயலாளர் ரஞ்சித்,பரமக்குடி தொகுதி செயலாளர் ராஜா,முதுகுளத்தூர் தொகுதி செயலாளர் சூரப்பாண்டி,மாநில துணை செய்தி தொடர்பாளர் தமிழ் வாணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.சிறப்பு அழைப்பாளர்களாக விடுதலை சிறுத்தைகள் கட்சி கிழக்கு மாவட்ட செயலாளர் அற்புதக் குமார்,தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட செயலாளர் கலையரசன்,திராவிட தமிழர் கட்சி மாவட்ட செயலாளர் சக்தி வேல் ஆகியோர் கலந்து கொண்டனர். மாவட்ட துணை செயலாளர் புகழ் வள்ளுவன்,பொருளாளர் சரவணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.





