தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியம் 200-வது வாரியக் கூட்டம்:அமைச்சர் ஆர்.எஸ்.இராஜகண்ணப்பன் தலைமையில் நடைபெற்றது!!!

சென்னை தலைமைச் செயலகத்தில் நாமக்கல் கவிஞர் மாளிகையில் 7-வது தளத்தில் உள்ள வனத்துறை கூட்டரங்கத்தில் தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியத்தின் 200வது வாரியக் கூட்டம் வனம் மற்றும் கதர்த் துறை அமைச்சரும்,தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியத்தின் தலைவருமான ஆர்.எஸ்.இராஜகண்ணப்பன் தலைமையில் நடந்தது.
இக்கூட்டத்தில் வாரிய உறுப்பினர்களான வே.அமுதவல்லி,(அரசு செயலர்,கைத்தறி,கைத்திறன்,துணிநூல் மற்றும் கதர்த் துறை),வா.சம்பத், (தலைமைச் செயல் அலுவலர்,தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியம்) எல்.நிர்மல்ராஜ்,(தொழில்துறை ஆணையர் மற்றும் தொழில் வணிக இயக்குனர்) செ.ஆ.ரிஷப்,(துணைச் செயலர், நிதித்துறை),ஆர்.உமாசங்கர் (நிதிநிலை ஆலோசகர் மற்றும் தலைமை கணக்கு அலுவலர்), துறை சார்ந்த தலைமை செயலக மற்றும் அலுவலர்கள் மற்றும் வாரிய அலுவலர்கள் கலந்து கொண்டனர். கூட்டப் பொருட்கள் விவாதிக்கப்பட்டு, தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரிய வளர்ச்சிப் பணிகளும் அமைச்சர் ஆர்.எஸ்.இராஜகண்ணப்பனால் ஆய்வு செய்யப்பட்டு அறிவுரைகள் வழங்கப்பட்டது.



