இராமநாதபுரத்தில் மீனவர் குறை தீர்க்கும் நாள் கூட்டம்!!!

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமையில் மீனவர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் மீனவர்களிடம் கோரிக்கைகள் தொடர்பான மனுக்கள் பெறப்பட்டதுடன்,கடந்த கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்களுக்கு பல்வேறு துறைகள் மூலம் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்ததுடன், நிலுவையில் உள்ள மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
பின்னர் மீனவர்களின் முக்கிய கோரிக்கையான மீனவர்கள் குடியிருப்பு பகுதியில் தடுப்பு சுவர் அமைத்தல், மீனவ குடும்பங்களுக்கு போதியளவு குடிநீர் வழங்க வேண்டுதல், மேலும் விடுபட்ட மீன்பிடி படகுகளுக்கு மானிய விலையில் டீசல் வழங்க வேண்டுதல் குறித்தும் தெரிவித்ததுடன், மீனவர்களின் கோரிக்கைகளுக்கு மீன்வளத்துறையின் மூலம் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள் மீன்வளத்துறையின் மூலம் வழங்கும் அனுமதி சீட்டை பெற்று செல்ல வேண்டும் என தெரிவித்ததுடன், காரங்காடு கடற்கரையில் கலங்கரை விளக்கு பழுதடைந்துள்ளதை சரிசெய்திட கோரிக்கை வைத்ததையொட்டி உடனடியாக சரிசெய்திடப்படும். அதேபோல் நிர்ணயிக்கப்பட்ட எல்லைக்குள் மீன்பிடிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.
மேலும் மகளிர் குழுக்கள் அமைத்து சுயதொழில் துவங்க ஏதுவாக கூட்டுறவு வங்கிகள் மூலம் kcc அட்டை வழங்கப்படுகிறது மகளிர்குழுக்கள் பதிவு செய்தி kcc அட்டை பெற்றிடவேண்டும்.மேலும் மீன்வளத்துறையின் மூலம் மீனவர் குடும்பங்களை சேர்ந்த மகளிர்களுக்கு வலை பின்னுதல்,கடற்பாசி வளர்ப்பு, மீன் உணவுப் பொருள்கள் தயாரித்தல் போன்ற பயிற்சிகள் வழங்கப்படுகிறது. மகளிர்கள் பங்கேற்று பயிற்சி பெற்று மகளிர் குழுக்கள் அமைத்து வங்கிகள் மூலம் கடனுதவி பெற்று பயன்பெற வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.
தொடர்ந்து மீன்வளத்துறையின் மூலம் தொழில் நுட்பம் பயிற்சி பெற்ற (வலை பின்னுதல், கடற்பாசி வளர்ப்பு, மீன் உணவுப் பொருள்கள் தயாரித்தல்) 25 மகளிர்களுக்கு பயிற்சி சான்றுகளை மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் வழங்கினார்.

இக்கூட்டத்தில் உடன் உதவி காவல் கண்காணிப்பாளர் மீரா,மீன்வளத்துறை துணை இயக்குநர் வேல்முருகன்,மீன்வளத்துறை உதவி இயக்குநர்கள் சிவகுமார்,ஜெயக்குமார், தமிழ்மாறன்,இராஜேந்திரன் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.



