இராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவிப்பு!!!

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்ததாவது:-
இராமநாதபுரம் மாவட்டத்தில் முதலமைச்சரின் பெண் குழந்தைப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் பதிவு செய்து தமிழ்நாடு மின்விசை நிதி நிறுவனம் மூலம் வைப்புத் தொகை ரசீது பெற்ற பெண் குழந்தைகளில் 18 வயது நிரம்பிய முதிர்வுத் தொகை பெறவேண்டிய பயனாளிகள் சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் உள்ள சமூகநல விரிவாக்க அலுவலர்களிடமிருந்து அல்லது மாவட்ட சமூகநல அலுவலகத்தில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. தற்போது முதிர்வுத் தொகை பெற வேண்டி நிலுவையிலுள்ள பயனாளிகளின் பட்டியல் https:/Ramanathapuram.nic.in என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
சமர்ப்பிக்க வேண்டிய சான்றுகள் 1.வைப்புத் தொகை ரசீது நகல், 2. பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்று நகல், 3.பயனாளியின் வங்கிக்கணக்குப் புத்தக நகல், 4.பயனாளியின் புகைப்படம் (தாய் மற்றும் மகள் இருவருக்கும்) தற்போது முதிர்வுத் தொகை பெற 18 வயது நிரம்பிய நிலுவையிலுள்ள பயனாளிகளின் ஆவணங்களை எதிர்வரும் 30.11.2025-க்குள் உடனடியாக சமர்ப்பிக்கும் பட்சத்தில் முதிர்வுத் தொகையானது பயனாளிகளின் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படும்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



