இராமநாதபுரத்தில் முன்னாள் படை வீரர்களுக்கான சிறப்பு சலுகை:பயன் பெற மாவட்ட ஆட்சியர் அழைப்பு!!!

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்ததாவது:-
முன்னாள் படைவீரர் மற்றும் சார்ந்தோர்கள் அறிவது,அரசு மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களில் தையற் பயிற்சி பெற்ற முன்னாள் படைவீரர் மனைவி / கைம்பெண் மற்றும் திருமணமாகாத மகள்களுக்கு இலவச தையல் இயந்திரம் வழங்கப்படுகிறது. கீழ்கண்ட தகுதிகள் உள்ள நபர்கள் இத்திட்டத்தின் மூலம் பயனடையலாம்.
- முன்னாள் படைவீரரின் மனைவி / கைம்பெண் மற்றும் திருமணமாகாத மகள்களாக இருத்தல் வேண்டும். முன்னாள் படைவீரர் பிறப்பால் தமிழ்நாட்டைச் சார்ந்தவராக இருத்தல் வேண்டும்.படைவிலகல் சான்றில் வீட்டு முகவரி தமிழ்நாடு மாநிலம் என குறிப்பிடப்பட்டிருத்தல் வேண்டும்.
02.படைவிலகல் சான்றில் தையல் இயந்திரம் கோரும் பயனாளியின் பெயர் பதிவு செய்யப்பட்டிருத்தல் வேண்டும். மத்திய / மாநில அரசு மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களில் குறைந்தபட்சம் மூன்று மாதகாலம் தையல் பயற்சி முடித்து உரிய சான்று பெற்றிருத்தல் வேண்டும்.
03.முன்னரே மத்திய / மாநில அரசு மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களின் வாயிலாக இலவச தையல் இயந்திரம் பெற்றவராக இருத்தல் கூடாது. பயனாளி 40 வயதிற்குள் இருத்தல் வேண்டும்.
முன்னாள் படைவீரரின் குடும்பத்தில் தகுதியுள்ள ஒருவருக்கு மட்டுமே இலவச தையல் இயந்திரம் வழங்கப்படவேண்டும். மேற்காணும் தகுதியுள்ள நபர்கள் உதவி இயக்குநர், முன்னாள் படைவீரர் நலன்,இராமநாதபுரம் அலுவலகத்திற்கு நேரில் உரிய ஆவணங்களுடன் 25.11.2025-ற்குள் வருகை தந்து பயன்பெறலாம்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



