பரமக்குடி வருவாய் கோட்டாட்சியர் செய்திக்குறிப்பு!!!

இந்தியத் தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி, 209.பரமக்குடி(தனி) சட்டமன்றத் தொகுதியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தம் (Special Intensive Revision) நடைபெற்று வருகிறது. வாக்குச்சாவடி நிலை அலுவலர்களால் கணக்கெடுப்புப் பணி 04.11.2025 முதல் தொடங்கப்பட்டு 04.12.2025 வரை நடைபெறவுள்ளது. வாக்காளர்கள் https://voters.ecl.gov.in மற்றும் erolls.tn.gov.in/Rollpdf/SIR_2002.aspx என்ற வலைதளங்களைப் பயன்படுத்தி வாக்காளர் சுய விவரங்களைத் தெரிந்து கொள்ளலாம்.
மேலும், சிறப்பு தீவிரத் திருத்தம் தொடர்பாக, பொதுமக்கள் தங்களுக்கு ஏற்படும் சந்தேகங்கள் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு 209.பரமக்குடி(தனி) சட்டமன்றத் தொகுதி கட்டுப்பாட்டு அறையின் தொலைபேசி எண்: 04564-224151 என்ற தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.மேற்கண்ட தகவலை பரமக்குடி வருவாய் கோட்டாட்சியர் ஞா.சரவண பெருமாள் தெரிவித்துள்ளார்.



