இராமநாதபுரத்தில் குழந்தை உரிமைகள் மற்றும் பாதுகாப்பு தொடர்பான சட்டங்கள் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம்!!!

இராமநாதபுரத்தில் தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் (NCPCR) திட்டத்தின் கீழ் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் குழந்தை உரிமைகள் மற்றும் பாதுகாப்பு தொடர்பான சட்டங்கள் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமை வகித்தார். தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் இயக்குநர்கள் சுவார்னிமா பாண்டே,அனுபா ஜெயின், கண்ணாயிரம் ஆகியோர் பங்கேற்று விழிப்புணர்வு குறித்து கருத்துரை வழங்கினர்.
மேலும் பள்ளிக்குழந்தைகளுக்கு உடல் ரீதியான மற்றும் மனரீதியான தண்டனை,இளைஞர் நீதிச் (குழந்தைகளின் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டம்-2015, போக்சோ சட்டம்-2012 ஆகியவை குறித்து தெரிவிக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரெஜினா,மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர் சிவக்குமார்,மாவட்ட குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் விசுபாவதி,மாவட்ட சமூகநல அலுவலர் சுமதி மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.



